Saturday, October 29, 2011
Monday, October 24, 2011
Saturday, October 15, 2011
Monday, October 3, 2011
இலங்கையில் சைபர் பாதுகாப்பு வாரம்
சைபர் பாதுகாப்பு வாரம் இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கணிணி அவசர அழைப்பு பிரிவு குறிப்பிடுகிறது.இந்த வாரத்தை முன்னிடடு கணிணி மற்றும் இணையம் தொடர்பில் தெளிவுபடுத்தும் செயற்றிட்டங்கள் சில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஹன பல்லியகுரு தெரிவித்துள்ளார்.
Thursday, June 30, 2011
பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் அறிமுகம் (வீடியோ இணைப்பு)
இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு போட்டியாக "கூகுள் பிளஸ்" என்ற சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும் அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கைத்தொலைபேசிகள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில் சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்) சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப் போல தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல் உபயோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழில்நுட்பமுறையில் இங்கு பொட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால் இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது.
இது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலமே சாத்தியமாகி உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.
600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சமூக இணையதள உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News:Lankasri
Sunday, June 19, 2011
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு
இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்கம் செய்யும் போது சிலர் எதாவது தரவிறக்க மென்பொருள்களைப் பயன்படுத்துவார்கள்.
பெரும்பாலானோர் பயர்பொக்ஸ் உலவியைப் பயன்படுத்துபவர்கள் தரவிறக்கம் செய்யும் போது அவை பயர்பொக்சின் இயல்பான தரவிறக்க வசதியிலேயே தரவிறக்குவார்கள். சிறிய கோப்பென்றால் பிரச்சினையில்லை.
பெரிய கோப்புகளைத் தரவிறக்கும் போது சிலருக்குக் காத்திருக்கப் பிடிக்காது. பயர்பொக்சில் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தியும் வைக்க முடியாது. தரவிறக்கம் முடியும் வரை நாமும் கணணியை அணைக்காமல் வைத்திருக்க வேண்டும்.
இந்த மாதிரி நிலைகளில் தரவிறக்கம் முடிந்தவுடன் விண்டோஸ் தானாகவே அணைத்து விடப்பட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும் என நினைப்போம். இதற்கு உதவுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பயர்பொக்ஸ் நீட்சி தான் Auto Shutdown NG.
இந்த நீட்சியின் மூலம் பயர்பொக்சில் தரவிறக்கும் செயல் முடிந்தவுடன் கணிணியை தானாகவே அணைத்து விடமுடியும். இதனால் நாமும் கணணியோடு சேர்ந்து காத்திருக்கத் தேவையில்லை. இந்த நீட்சியை நிறுவிய பின்னர் Firefox Addons சென்று AutoShutdown Option இல் உங்கள் இயங்குதளத்தைத் தேர்வு செய்து விட்டால் போதும்.
அடுத்து எதாவது ஒரு கோப்பை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யும் போது அதன் டவுன்லோடு மேனேஜர்(Firefox Download manager) விண்டோவின் அடியில் கணணியை அணைப்பதற்கான (Shut down) பட்டன் ஒன்று புதியதாக வந்திருக்கும். இதனை ஒருமுறை கிளிக் செய்தால் இது சிவப்பு நிறத்தில் மாறிவிடும்.
உங்களுக்கு தரவிறக்கம் முடிந்தவுடன் கணணியை அணைக்க வேண்டுமென்றால் ஒரு முறை கிளிக் செய்தால் போதுமானது. கணணியை அணைக்க வேண்டாம் என்றால் மீண்டும் அந்த பட்டனையே கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் உங்கள் வேலையைச் செய்யலாம்.
எல்லா கோப்புகளும் தரவிறக்கி முடிந்தவுடன் இந்த நீட்சி கண்டறிந்து கணணியை அணைத்து விடும். தரவிறக்கம் முடிந்தவுடன் கணணியை அணைக்கப்போவதற்கு முன் ஒரு அறிவிப்பு வரும்.
நீங்கள் கணணியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எனில் அதனை கேன்சல் செய்தால் போதும். கணணி அணைக்கப்படுவது நிறுத்தப்படும். பெரிய அளவிலான கோப்புகளை இரவு நேரத்தில் தரவிறக்க இந்த நீட்சி பயனுள்ளதாக இருக்கும்.
News:Lankasri
Friday, June 17, 2011
பழைய பிரவுசர்களை கைவிடும் கூகுள்
கூகுள் தன் அப்ளிகேஷன் மென்பொருள்களில் பழைய பிரவுசர்களுக்கான தொழில்நுட்ப உதவியை நிறுத்திவிடப் போவதாக அறிவிப்பு வழங்கியுள்ளது.
அந்த வகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7, மொஸில்லா பிரவுசர் 3.5. ஆப்பிள் சபாரி 3 மற்றும் கூகுள் பிரவுசர் 9 ஆகியவற்றை கூகுள் சுட்டிக் காட்டியுள்ளது.
இவை அனைத்துமே இவற்றிற்குப் பின்னர் இரண்டு புதிய பதிப்புகளை வெளியிட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் புதிய பதிப்பிற்கு மாற வேண்டும் என கூகுள் எதிர்பார்க்கிறது.
கூகுள் மெயில் மற்றும் டாக்ஸ் புரோகிராம்களும், இவற்றிற்கான சப்போர்ட் தந்திடும் பணியை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு அப்ளிகேஷன் மென்பொருள் தொகுப்பிற்கும், புதிய பதிப்பு ஒன்று வெளியாகும் போது அதற்கு முந்தைய பதிப்பிற்கு முந்தைய பதிப்பிற்கான உதவியை நிறுத்துவதனை கூகுள் இனி வாடிக்கையாகக் கொள்ளும் என இந்நிறுவன பொறியியல் குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அறிவிப்பது கூகுள் நிறுவனத்திற்கு முதல் முறை அல்ல. ஏற்கனவே 2010 ஆம் ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6க்கு தன் சப்போர்ட்டை நிறுத்தியது.
கூகுள் டாக்ஸ் இனிமேல் அதனுடன் இயங்காது என அறிவித்தது. அப்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6னை 10.4% மக்கள் பயன்படுத்தி வந்தனர். இருந்த போதும் தன் கொள்கையை கூகுள் அமல்படுத்தியது.
இப்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7க்கான சப்போர்ட்டை நிறுத்துவதாக கூகுள் தான் முதன்முதலாக அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் இதற்கான சப்போர்ட்டை ஏப்ரல் 2014 வரை தரப்போவதாக அறிவித்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆனால் பழைய பிரவுசர்கள் மூலம் கூகுள் சர்ச் இஞ்சினில் நாம் இன்னும் தேடுதல் வேலையை மேற்கொள்ள முடியும்.
News:Lankasri
Thursday, June 16, 2011
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு
இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு திறமைகள் இருக்கும். உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
நாம் எந்த விடயங்களில் நிபுணர் என்பதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வழி செய்வது தான் இந்த தளத்தின் நோக்கம். நிபுணர் என்றவுடம் ஏதோ டாக்டர் பட்டம் வாங்கி ஆய்வு கட்டுரை எல்லாம் சமர்பித்திருக்க வேண்டும் என்று நினைத்து மிரண்டுவிட வேண்டாம்.
எல்லோருக்குமே ஏதாவது ஒரு விடயத்தில் அதிகப்படியான அனுபவமும் விடய ஞானமும் இருக்கும் அல்லவா?அந்த விடயம் தொடர்பான திறனையே இந்த தளம் நிபுணத்துவமாக கருதுகிறது.
உதாரணமாக ஒருவர் வருமான வரி எப்படி செலுத்த வேண்டும் என்பதில் கில்லாடியாக இருப்பார். இன்னொருவர் இணையத்தில் புதிய தகவல்களை கண்டுபிடிப்பதில் விஷேட திறன் பெற்றிருப்பார்.
சச்சின் சாதனை பட்டியலை விரல் நுனியில் வைத்திருப்பவர், ரெயில்களின் நேரம் மற்றும் அவற்றின் பாதைகளை அறிந்திருப்பவர், இளையராஜா பாட்டுக்களை வரிசையாக அறிந்திருப்பவர் என்று இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
நமது நண்பர்களிலேயே இத்தகைய நிபுணர்களை நாம் அடையாளம் காணலாம். கைத்தொலைபேசியில் புதிய சேவை கண்ணாமூச்சி காட்டுகிறதா, இது போன்ற விடயங்கள் எல்லாம் அவருக்கு தான் அத்துபடி என்று கைத்தொலைபேசி புலியாக விளங்கும் நண்பரை நாடிச்செல்வோம் அல்லவா? சில நேரங்களில் நாமே கூட இந்த விடயம் எல்லாம் எனக்கு தெரியும் என்று நாமறிந்த தலைப்பு குறித்து பெருமைப்பட்டு கொள்வதுண்டு.
இத்தகை நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை தான் ஸ்மார்ட்டரர் ஏற்படுத்தி தருகிறது. நீங்கள் எவற்றில் கில்லி அல்லது கில்லாடி என்பதை இந்த தளத்தின் மூலம் இணைய உலகிற்கு அறிவிக்கலாம்.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். நீங்கள் நிபுணர் என்று மட்டும் அறிவித்து கொண்டால் போதாது. அதற்கான ஆதாரம் வேண்டும். அதாவது நீங்கள் நிபுணர் தான் என்ற சான்றிதழ் பெற வேண்டும்.
சான்றிதழுக்கு எங்கே போவது என குழம்ப வேண்டாம். இந்த தளமே அத்தகைய சான்றிதழையும் வழங்குகிறது. ஆனால் அந்த சான்றிதழை பெற நீங்கள் உங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டு திறமையை நிருபிக்க வேண்டும். இது தான் இந்த தளத்தை சுவாரஸ்யம் மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகிறது.
அதாவது நீங்கள் எந்த துறை அல்லது தலைப்பில் திறன் உள்ளவர் என்று கருதுகிறீர்களோ அவை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். சரியான பதில்களுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும். அந்த மதிப்பெண் சான்றிதழோடு உங்கள் நிபுணத்துவத்தை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
இதை தான் புத்திசாலி என்று நினைக்கிறீர்களா, கேள்விகளுக்கு பதில் சொல்லி அதை நிருபித்து உலகோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் அதை சுவையாக நிறைவேற்றித் தருகிறது.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் என்னவென்றால் இந்த கேள்விகள் தயாரிக்கப்பட்டவை அல்ல. அவை இணையவாசிகளால் உருவாக்கப்பட்டவை. ஆம் இணையவாசிகள் தங்களுக்கு பரிட்சயமான தலைப்பு அல்லது துறைகளின் கீழ் கேள்வி பதில்களை சமர்பிக்கலாம். அந்த கேள்விகள் தான் திறமையை நிருபிக்க விரும்புகிறவர்களிடம் கேட்கப்படுகின்றன.
இப்படி இணையவாசிகள் கேள்விகளை சமர்பிப்பதால் கேள்விகள் ஒரே மாதிரியாக இல்லாமால் புதுப்பிக்கப்பட்டு கொண்டேயிருக்கும். அடிப்படையில் கூட்டத்தின் அறிவை பயன்படுத்தி கொள்வதால் கேள்விகள் அமையும்.
கேள்விகளை எதிர்கொள்வதும் ஈடுபாட்டை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்புகிறவர்கள் முதலில் தங்களுக்கான தலைப்பை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு மாதிரி கேள்வி ஒன்று கேட்கப்படுகிறது. அதற்கு பதில் அளித்து விட்டு மதிப்பெண்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ளலாம்.
அதன் பிறகு மதிப்பெண்களை பார்த்து விட்டு உங்கள் நிபுணத்துவத்தை உலகுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பெருமையை பேஸ்புக், டிவிட்டர், வலைப்பதிவு போன்றவற்றின் மூலமாகவும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
முதல் சுறில் மதிப்பெண் குறைவா கவலையே வேண்டாம், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யலாம் அல்லது இன்னும் மேம்படுத்தி கொள்ள விரும்பினாலும் மீண்டும் புதிய கேள்விகளை முயற்சிக்கலாம். தங்கள் பங்கிற்கு கேள்விகளையும் சேர்க்கலாம். புதிய தலைப்புகளையும் பரிந்துரைக்கலாம். இவையெல்லாம் இதில் ஒருவர் உருவாக்கி கொள்ளும் உறுப்பினர் பக்கத்தில் பிரதிபலிக்கும்.http://smarterer.com/
News:Lankasri
Tuesday, June 14, 2011
ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளை பயன்படுத்த
ஸ்கைப் சேவையை உலகெங்கும் பலர் இணைய வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சேவை Voive Over IP என்ற தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ஸ்கைப் பயனர்கள் மற்ற ஸ்கைப் பயனர்களுக்கு இலவசமாகப் பேச முடியும்.
தொலைபேசி மற்றும் வேறு அழைப்புகளுக்கு கணக்கிலிருந்து பிடித்துக் கொள்வார்கள். தற்போது இந்த சேவையை மைக்ரோசாப்ட் 8.5 பில்லியன் டொலர்களுக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது 663 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த சேவையில் ஒரு நேரத்தில் ஒரு பயனர் கணக்கைத் தான் பயன்படுத்த முடியும். உங்களுக்கு ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைய வேண்டும் என ஆசைப்பட்டால் ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது. அதன் பெயர் Multi Skype Launcher.
இந்த மென்பொருள் மூலம் ஒரே கணணியில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைந்து பல நண்பர்களிடம் பேச முடியும். இந்த மென்பொருளைத் தரவிறக்கியதும் நிறுவி விட்டு தங்களது கணக்கில் முதலில் நுழையவும்.
பின்னர் ADD என்பதைக் கிளிக் செய்து தங்களின் பல கணக்குகளைச் சேர்த்துக் கொண்டு பயன்படுத்தலாம். வெறும் 1.7 Mb அளவே உடைய இலவச மென்பொருளாகும்.
உங்களுக்கென்று பேஸ்புக்கில் தனி ரசிகர் பக்கம் உருவாக்குவதற்
முகப்புத்தகம், முகநூல் என்று தமிழில் அழைக்கப்படும் பேஸ்புக் தளம் இணைய உலகை ஆட்சி செய்துக் கொண்டிருப்பதற்கு மேலும் ஓர் உதாரணம் அதிகமான தளங்களில் காணப்படும் "ரசிகர் பக்கம்" எனப்படும் Fan Page ஆகும்.
நமக்காக ஒரு ரசிகர் பக்கத்தை உருவாக்கலாம்.
1. முதலில் உங்கள் Facebook கணக்கைக் கொண்டு உள்நுழையுங்கள். உங்களுக்கு ஐடி இல்லையென்றால் புதிதாக ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
2. பிறகு http://www.facebook.com/pages/create.php/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
3. அங்கு ஆறு விதமான Options இருக்கும். அதில் "Brand or Product" என்பதை க்ளிக் செய்யவும்.
4. பிறகு Drop Down Box-ல் Website என்பதை தேர்வு செய்து கீழே உங்கள் ரசிகர் பக்கத்திற்கான பெயரை டைப் செய்து பின் "I agree to Facebook Pages terms" என்பதில் Check செய்து "Get Started" என்பதை க்ளிக் செய்யவும்.
5. பிறகு உங்கள் Fan Pageன் Dashboard பக்கத்திற்கு வந்துவிடும். அங்கு மீண்டும் ஒரு முறை உங்கள் Fan Pageன் பிரிவை(Category) உறுதி செய்ய சொல்லும்.
6. அங்கு முதல் Drop Down Boxல் "Websites&Blogs" என்பதனையும், இரண்டாவது Drop Down Box-ல் "Personal Blog" அல்லது உங்களுக்கு விருப்பமான பிரிவை தேர்வு செய்து "Update Category" என்பதை க்ளிக் செய்யவும்.
7. பிறகு "Upload an Image" என்பதை க்ளிக் செய்து, உங்கள் பேன் பேஜ் காக உங்கள் விருப்பமான படத்தை மாற்றிக் கொள்ளவும்.
8. பிறகு "Edit Info" என்பதை க்ளிக் செய்து பின் Basic Information என்பதை க்ளிக் செய்யவும்.
9. அங்கு உங்கள் தளம் பற்றிய விபரங்களை கொடுத்து "Save Changes" என்பதை க்ளிக் செய்யவும். [இதனை செய்யும் போது ஒழுங்காக Update ஆகவில்லை எனில், ஒவ்வொன்றாக கொடுத்து Update செய்யவும்.]
10. பிறகு இடது புறத்தில் "Manage Permissions" என்பதை க்ளிக் செய்து சில மட்டுறுத்தல்களை உங்கள் விருப்பப்படி செய்துக் கொள்ளலாம்.
நாம் உருவாக்கிய பேஸ்புக் பக்கத்தின் முகவரியை அறிய: மேற்சொன்னவாறு நாம் மாற்றங்கள் செய்துக் கொண்டிருக்கும் போது வலது புறம் மேலே View Page என்ற பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்யுங்கள். உங்கள் பக்கம் வந்துவிடும். அங்கு Address Barல் இருக்கும் முகவரி தான் உங்கள் ரசிகர் பக்கத்தின் முகவரியாகும்.
News:Lankasri
தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக பெற
இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள்.
ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய மின்னஞ்சல் கொடுத்து தரவிறக்கம் செய்தால் அந்த மின்னஞ்சலை பல spam நிறுவனங்களுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத மின்னஞ்சலில் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும். ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது. ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர்.
இப்படிபட்டவர்களுக்கான ஒரு இலவச தளம் உள்ளது. மென்பொருட்களை உங்கள் மின்னஞ்சலுக்கே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் பிரபலமான தளம். இந்த தளத்தில் தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக அறிமுகப்படுத்துவார்கள்.
அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய 24 மணி நேரம் கால அவகாசம் கொடுப்பார்கள். அதற்குள் அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
24 மணி நேரம் கழித்து தரவிறக்கம் செய்தால் அந்த மென்பொருளை இலவசமாக பெற முடியாது. காசுகொடுத்து தான் வாங்க வேண்டும் ஆக முந்தி கொள்வதே நல்லது.
இந்த தளத்தில் நாம் உறுப்பினர் நம் மின்னஞ்சலை கொடுத்து பதிந்து விட்டால் அந்த நாளுக்கான இலவச மென்பொருளை பற்றி நமது மின்னஞ்சலுக்கே அனுப்பி விடுவார்கள். அந்த லிங்கில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தரவிறக்கம் செய்து நிறுவச் செய்ததும் கொடுக்கப்படும் ஆக்டிவேசன் கீயை மறக்காமல் கொப்பி செய்து மென்பொருளை register செய்து கொண்டால் தான் காலம் முழுவதும் இலவசமாக மென்பொருளை உபயோகிக்க முடியும்.
ஆனால் இந்த முறையில் உள்ள ஒரு குறை நாம் மென்பொருளை நிறுவச் செய்யும் அந்த பதிப்பில் இருந்து புதிய பதிப்பை அப்டேட் செய்ய முடியாது. அப்டேட் செய்ய வேண்டுமென்றால் காசு கொடுத்து ஆகவேண்டும்.
இந்த தளத்தில் சைட்பாரில் உள்ள விட்ஜெட்டில் subscribe by Email என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் மின்னஞ்சலை கொடுத்து பதிந்து கொண்டால் உங்கள் மின்னஞ்சலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்றி செய்தி அனுப்புவார்கள்.
தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது.
இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும்.
பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. இந்த பிரவுசர் வெளியான போது மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.
தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை உங்கள் கணணியில் இயக்க http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் கணணியில் இயங்கும் ஓபரேட்டிங் சிஸ்டம்(விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட்) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை தரவிறக்கம் செய்திடவும்.
விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.
News:Lankasri
Tuesday, June 7, 2011
விண்வெளியில் வெள்ளரிக்காய், தக்காளி பயிரிட முயற்சி - ஜப்பான் விஞ்ஞானி
சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாய பண்ணை அமைப்பதில் ஜப்பான் விஞ்ஞானி தீவிரமாக உள்ளார். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நடுவானில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்து வருகின்றன. சோயுஷ் விண்கலம் மூலம் சென்று அங்கு ஆய்வகம் (பரிசோதனை கூடம்) அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அத்துடன் அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் காய்கறிகளை பயிரிட திட்ட மிட்டுள்ளன. இந்நிலையில் நாளை (புதன்கிழமை) சோயுஷ் விண்கலம் முலம் விண்வெளி வீரர்கள் சதோஷி புருகவலா (ஜப்பான்), செர்ஜி வல்கோவ் (ரஷியா), மைக்கேல் போசும் (அமெரிக்கா) ஆகியோர் சர்வதேச விண்வெளி மையம் புறப்பட்டு செல்கின்றனர்.
அதற்காக கஜகஸ்தானில் உள்ள பைகாணர் விண்வெளி தளத்தில் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் ஜப்பான் விண்வெளி வீரர் சதோஷி புருகவலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை புறப்பட்டு செல்லும் நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதம் தங்கி ஆய்வக பணியை மேற்கொள்ள இருக்கிறோம். அப்போது அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் வெள்ளரிக்காய் பயிரிட்டு அறுவடை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை அங்கேயே அவர்கள் உற்பத்தி செய்ய முடியும் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, விண் வெளியில் எங்களால் வெள்ளரிக்காய்களை சாப்பிட முடியும். ஆனால் அதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை என்று நகைச்சுவையுடன் கூறினார்.
ரஷிய விண்வெளி வீரர் செர்ஜி வால்கோவ் கூறும்போது, விண்வெளி மையத்தில் சாலட் தயாரிக்க அனுமதி அளித்தால் அங்கு தக்காளியை உற்பத்தி செய்ய வும் தயாராக இருக்கிறோம். எனக்கு வறுத்த உருளைக்கிழங்கும் சாப்பிட பிடிக்கும் என்று நகைச்சுவை உணர்வுடன் கூறினார்.
அத்துடன் அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் காய்கறிகளை பயிரிட திட்ட மிட்டுள்ளன. இந்நிலையில் நாளை (புதன்கிழமை) சோயுஷ் விண்கலம் முலம் விண்வெளி வீரர்கள் சதோஷி புருகவலா (ஜப்பான்), செர்ஜி வல்கோவ் (ரஷியா), மைக்கேல் போசும் (அமெரிக்கா) ஆகியோர் சர்வதேச விண்வெளி மையம் புறப்பட்டு செல்கின்றனர்.
அதற்காக கஜகஸ்தானில் உள்ள பைகாணர் விண்வெளி தளத்தில் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் ஜப்பான் விண்வெளி வீரர் சதோஷி புருகவலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை புறப்பட்டு செல்லும் நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதம் தங்கி ஆய்வக பணியை மேற்கொள்ள இருக்கிறோம். அப்போது அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் வெள்ளரிக்காய் பயிரிட்டு அறுவடை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை அங்கேயே அவர்கள் உற்பத்தி செய்ய முடியும் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, விண் வெளியில் எங்களால் வெள்ளரிக்காய்களை சாப்பிட முடியும். ஆனால் அதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை என்று நகைச்சுவையுடன் கூறினார்.
ரஷிய விண்வெளி வீரர் செர்ஜி வால்கோவ் கூறும்போது, விண்வெளி மையத்தில் சாலட் தயாரிக்க அனுமதி அளித்தால் அங்கு தக்காளியை உற்பத்தி செய்ய வும் தயாராக இருக்கிறோம். எனக்கு வறுத்த உருளைக்கிழங்கும் சாப்பிட பிடிக்கும் என்று நகைச்சுவை உணர்வுடன் கூறினார்.
News:Yarlmuslim
Sunday, June 5, 2011
பேஸ்புக்கின் அருமையான விளையாட்டுக்கள்
பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வளர்ந்து வரும் ஒரு சமூக இணையதளமாகும்.
2. City Ville: இந்த விளையாட்டு மேலும் சுவாரஸ்யமாக இருக்கும். உங்களுக்கு என்று ஒரு தனி நகரத்தை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். அதில் பாதுகாவலர்களாக உங்கள் நண்பர்களை வைக்கலாம். நீங்கள் இருக்கும் இடத்தை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்களே வடிவமைக்கலாம். இப்படி ரசித்து விளையாடக்கூடிய விளையாட்டு இது.
இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விடயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம்.
இந்த பேஸ்புக் தளத்தில் எண்ணற்ற வசதிகள் குவிந்துள்ளன. அதில் ஒன்று இந்த அப்ளிகேஷன்கள். இதன் மூலம் நாம் பேஸ்புக் தளத்தில் இல்லாத வசதிகளையும் உபயோகிக்கலாம் மற்றும் அனைவரையும் ரசிக்க வைக்கும் மிகச்சிறந்த விளையாட்டுக்களையும் இந்த அப்ளிகேஷன்கள் மூலம் நாம் பெறலாம்.
1. Farm Ville : பேஸ்புக் ஆரம்பத்திலிருந்து அனைவரின் விருப்பத்திற்கும் ஏற்ற விளையாட்டு இது. விவசாயத்தை மறந்துவிட்ட நமக்கு எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்று ஜாலியாக சொல்லி கொடுக்கிறது இந்த விளையாட்டு. விளையாடுவதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
3. Bejeweled Blitz: இந்த விளையாட்டு Puzzle வகை விளையாட்டு. பிரபல விளையாட்டு நிறுவனமான Popup games நிறுவனம் இந்த விளையாட்டை பேஸ்புக் வாசகர்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. இந்த விளையாட்டு 25 மில்லியன் பதிப்பு உலகளவில் விற்கப்பட்டுள்ளது. 150 மில்லியன் பதிப்புகள் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
4. Mafia Wars: குழந்தைகள் மிகவும் விரும்பி விளையாடும் விளையாட்டு. இது ஒரு சுவாரசியமான விளையாட்டாகும். கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரத்திற்குள் எதிரிகளை தாக்கி அழிக்க வேண்டும் என்பதே இந்த விளையாட்டின் நோக்கமாகும். மிகவும் அற்புதமான விளையாட்டு இது.
News:Lankasri
Thursday, June 2, 2011
எண்ணங்கள், சொற்கள் மூளையில் எங்கிருந்து உருவாகின்றன! கண்டு பிடித்து அசத்திய விஞ்ஞானிகள்
மனித மூளையில் சொற்களின் வடிவங்களுக்கான வழிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மோசமான அங்கவீனம் காரணமாகப் பேச முடியாமல் இருப்பவர்களுக்கு என்றாவது ஒரு நாள் இது உதவக் கூடிய வகையில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது.மூளையின் மிகவும் ஆழமானதோர் ஒதுக்கிடத்தில் சொற்களின் வடிவங்கள் தோற்றம் பெறுவதற்கான ஒரு வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
ஆங்கில மொழியிலிருந்து 40 அல்லது அதற்கு மேற்பட்ட ஓசைகளை உருவாக்கக் கூடிய மூளையின் ஒரு பகுதியை இலத்திரனியலைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இனம் கண்டுள்ளனர்.
இந்த ஒவ்வொரு ஓசையும் அதற்கே உரிய அறிகுறிகளைக் கொண்டுள்ளன. இந்த வகையில்தான் ஒரு கம்பியூட்டர் மக்கள் தமது சிந்தனையின் அடிப்படையில் என்ன சொல்ல முனைகின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றது.
வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் நரம்பியல் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புப் பிரிவு மூளை பற்றிய இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் எரிக் லுதார்ட் இதற்குத் தலைமை தாங்கினார்.
மிக மோசமான ஈர்ப்புவலி நோயால் பாதிக்கப்பட்ட நான்கு பேரின் தலைகளில் 64 இலத்திரனியல் கூறுகளைப் பொருத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கான உண்மையான நோக்கம், அவர்களின் ஈர்ப்புவலிக்கான காரணத்தைக் கண்டறிவதுதான். ஆனால் இந்த ஆய்வின்போது மூளையில் வார்த்தைகள் தோற்றம்பெறும் பகுதியும் கண்டறியப்பட்டுள்ளது
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க
கணணியை நிலைகுலையச் செய்யும் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவற்றைத் தடுப்பதற்காக நாம் ஆண்டிவைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம்.சில கணணிகளில் மால்வேர்கள், ஸ்பைவேர்களின் காரணமாக கணணி மெதுவாக இயங்கும். இவைகளை ஒருசில நேரங்களில் ஆண்டிவைரஸ் மென்பொருள்களால் கண்டறிய முடிவதில்லை.
ஆண்டிவைரஸில் இல்லாத சில வசதிகளைக் கருத்தில் கொண்டு கணணியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் IoBit Malware Fighter.
Iobit நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான Advanced System care மற்றும் GameBooster போன்றவையும் மிகுந்த பிரபலமான மென்பொருள்களாகும். இந்த மென்பொருளின் நோக்கமாக அவர்கள் "Extra Protection for your PC Sequrity" என்று குறிப்பிடுகிறார்கள். இந்த மென்பொருள் என்னென்ன பாதுகாப்பை வழங்குகிறது?
1. ஆண்டிவைரஸ்களால் செய்ய முடியாத மால்வேர்கள் மற்றும் ஸ்பைவேர்கள்(Malwares, spywares) எங்கிருந்தாலும் கண்டுபிடித்து அழிக்கிறது. புதியதாக வராமல் தடுத்து பரவாமல் பார்த்துக் கொள்கிறது. மால்வேர்கள் மற்றும் ஸ்பைவேர்களும் வைரஸைப் போன்று கணணியைப் பாதிக்கச் செய்யக் கூடியவை.
2. இவை மட்டுமின்றி பலவகையான ஸ்பைவேர்கள், ஆட்வேர்கள்(Adwares), மோசமான ட்ரோஜன் வைரஸ்கள்(Trojans), Keyloggers, bots, worms, hijackers போன்றவற்றிலிரிந்து கணணியைப் பாதுகாக்கிறது.
3. இதன் DualCore நிரல் எஞ்சின் சிக்கலான மால்வேர்கள், ஒளிந்திருக்கும் ஸ்பைவேர்களை விரைவான நேரத்தில் கண்டறிந்து அழிக்கின்றன.
4. இதில் பலவகையான பாதுகாப்பு அம்சங்கள் தரப்பட்டுள்ளன. Startup guard, Process guard, Network guard, File guard, Cookie guard, Browser guard, USB guard, Malicious Action guard. இது போன்று கணணிக்கு எங்கிருந்தெல்லாம் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவை உள்ளே வரும் இடங்கள், பரவும் இடங்களில் உட்கார்ந்து கொண்டு அவற்றைக் கவனித்து அழிக்கிறது.
5. இந்த மென்பொருள் கணணியின் டிரைவர் கோப்புகளையும் சரியாக சோதித்து பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. சோதிக்க மூன்று வசதிகள் தரப்பட்டுள்ளன. Smart Scan, Full Scan, Custom Scan.
ஆண்டிவைரஸ் கணணியில் நிறுவப்பட்டிருந்தாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம். இது ஏற்கனவே இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருளோடு இணைந்து செயல்படக்கூடியது.
News:Lankasri
Wednesday, June 1, 2011
கைத்தொலைபேசி பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை
கைத்தொலைபேசி பயன்படுத்தாதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்லும் அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் கைத்தொலைபேசியின் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது.இன்றியமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் கைத்தொலைபேசிகளை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப்படுத்துவதால் உடலில் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இருப்பினும் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டால் புற்றுநோய் நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கைத்தொலைபேசிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர்.
குழுவுக்கு தலைவராக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.
கைத்தொலைபேசிகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.
கைத்தொலைபேசிகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் கைத்தொலைபேசிகள் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்றை அறிந்து கொண்டு பின்னர் தான் கைத்தொலைபேசியை வாங்குகின்றனர்.
ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு கைத்தொலைபேசிகளை வாங்கினால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
News:Lankasri
ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேடுவதற்கு
ஆனால் கூகுள் பிரியர்கள் கூட சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்க விரும்பலாம். ஒப்பீட்டு நோக்கில் பல தேடியந்திர முடிவுகளை பக்கத்தில் வைத்து பரிசீலித்து பார்க்க விரும்பலாம் அல்லது கூகுளில் சிக்காத தகவலை வேறு தேடியந்திரத்தில் வலை வீசி பார்க்க நினைக்கலாம்.
இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்க விரும்புகிறவர்களுக்கு உதவுவதற்காக என்றே பல தேடியந்திரங்கள் இருக்கின்றன. முக்கிய தேடியடந்திரங்களான யாஹு, பிங் மற்றும் கூகுளை ஒப்பிட்டு பார்க்க உதவும் தேடியந்திரங்களும் இருக்கின்றன.
அந்த வகையில் மை ஆல் சர்ச் என்னும் தேடியந்திரம் ஒரே நேரத்தில் எல்லா தேடியந்திரங்களிலும் தேடிப்பார்க்கும் வசதியை தருகிறது. ஒரே கிளிக்கில் முன்னணி தேடியந்திரங்களில் தேடிப்பாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தேடியந்திரம் அதனை கச்சிதமாக நிறைவேற்றி தருகிறது.
இதன் தேடல் கட்டத்தில் தேடலுக்கான குறிச்சொல்லை டைப் செய்ததுமே தேடல் முடிவு பக்கங்கள் வந்து நிற்கின்றன. எதிர்பார்க்க கூடியது போல முதலில் கூகுள் தேடியந்திர முடிவுகள் தோன்றுகின்றன.
அதற்கு மேலே யாஹு, பிங், ஆஸ்க், லைகோஸ், டக்டக்கோ உள்ளிட்ட தேடியந்திரங்களுக்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. எந்த தேடியந்திரம் தேவையோ அதனை கிளிக் செய்தால் அதற்கான முடிவுகளை பார்க்கலாம். இப்படி வரிசையாக ஒவ்வொரு தேடியந்திரமாக தேடிப்பார்க்கலாம்.
செய்திகளில் தேட விரும்புகிறோமா அல்லது புகைப்படம், வீடியோ போன்றவற்றை குறிப்பிட்டு தேட விரும்புகிறோமா என்றும் தீர்மானித்து கொள்ளலாம். முகப்பு பக்கதிலேயே இதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது
News:Lankasri
Tuesday, May 31, 2011
பயர்பொக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் புதிய நீட்சி FxChrome
இணைய உலகில் அதிகம் பேரால் விரும்பப்படும் பயன்படுத்தப்படும் உலாவியாக பயர்பொக்ஸ் இருந்து வருகிறது. ஆனால் கூகிள் வெளியிட்ட குரோம் உலவி தற்போது இதற்கு சவாலாக வந்து கொண்டிருக்கிறது.இதன் வளர்ச்சியும் அபரிதமாக உள்ளது. பயர்பொக்ஸ் ரசிகர்களையும் மெல்ல மெல்ல இழுத்து பயர்பாக்சின் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.
பேஸ்புக்கில் பழைய பொட்டோ வியூவரை மீண்டும் செயற்படுத்துவதற்கான புதிய முறை
எனினும் இந்த மாற்றங்கள் எதையும் விரும்பாதவர்கள் பழைய லைட் பாக்ஸ் எபெக்ட் இல்லாத போட்டோ வியூவரை விரும்புவர்கள் இலகுவாக அதை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.
அதற்கு பேஸ்புக்கில் படத்தை திறந்து விட்டு குறிப்பிட்ட பக்கத்தை ஒரு முறை Refresh செய்துவிட்டால் சரியாகிவிடும்.
அல்லது படத்தை திறந்ததும் ஒரு முறை கீபோட்டில் f5 கீயை அழுத்தினால் பழைய நிலைக்கு திரும்பிவிடும்.
News:LankasriMonday, May 30, 2011
பாடல்களை கட் செய்வதற்கு
எல்லா பாடல்களும் கிடைத்து விடாது. ஒரு சில பாடல்கள் முழுபாடல்களாக மட்டுமே கிடைக்கும். அதுபோன்ற பாடல்களை தனியே கட் செய்து நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் ஏதாவது ஒரு மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும்.
பாடல்களை கட் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் கிடைக்கின்றன. அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் MP3 Cutter.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணணியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த MP3 Cutter மென்பொருளை ஒப்பன் செய்யவும்.
பின் எந்த பாடலை கட் செய்ய வேண்டுமோ அதை File வழியாக சென்று ஒப்பன் செய்யவும். பின் உங்களுடைய பாடலானது பதிவேற்றம் செய்யப்பட்டு மென்பொருளில் ஒப்பன் ஆகும். பின் வேண்டிய பகுதியை தேர்வு செய்து கட் செய்து கொள்ளவும்.
பின் நீங்கள் கட் செய்த பாடலை சேமித்து கொள்ளவும். அவ்வளவு தான் இனி நீங்கள் விரும்பிய பாடலில் எந்த பகுதியை வேண்டுமானலும் அழைப்பு ஒலியாக மட்டுமல்ல நீங்கள் விரும்பும் பாடலாகவும் வைத்துக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் பாடல்களை கட் செய்ய அருமையான மென்பொருள் ஆகும்.
News:Manithan
Sunday, May 29, 2011
அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் இணையம்
ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிதான காரியம் இல்லை என்றாலும் கூகுள் போன்ற தளங்கள் பதில் அளித்துக் கொண்டு தான் இருக்கின்றன.ஆனால் ஒரு தளம் கேள்விகளுக்கு பதிலை நேரடியாக தன்னுடைய தளத்திலே அளிக்கிறது. கணக்கு அளவீடு முதல் உள்ளூர் தகவல் வரை கணணி மூலம் செயற்கைகோள் வரை அனைத்து கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் இருந்து பதில் அளிக்கிறது.
கணக்கு செய்ய வேண்டும் என்றால் ஒரு தளம், மேப் பார்ப்பதற்கு மற்றொரு தளம், அறிவியல் தகவல் அறிந்து கொள்ள மற்றும் ஒரு தளம், மருத்துவ தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் மற்றும் ஒரு தளம்.
இப்படி ஒவ்வொரு தளமாக சென்று தான் இதுவரை நாம் தகவல்களை அறிந்து கொண்டிருந்தோம். இனி ஒரே தளத்தில் இருந்து அத்தனைக்கும் பதில் கொடுப்பதற்காக ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளத்திற்கு சென்று கட்டத்திற்குள் ஒரு கணக்கு கொடுத்தால் உடனடியாக அதற்கான விடையும், ஒரு நாட்டைப்பற்றி கேட்டால் அந்த நாட்டின் மக்கள் தொகை என்ன எந்த மொழி பேசுபவர்கள் அதிகமாக வசிக்கின்றனர் என்பதையும், செயற்கைகோள் பற்றி கேட்டால் அதற்கான புள்ளி விபரங்களுடனும் தகவல்களை கொடுக்கின்றது.
ஒரு மருந்தைப் பற்றி கேட்டால் அதற்கான முழுவிபரமும், குறிப்பிட்டை ஊரைப்பற்றி கேட்டால் அந்த ஊரின் செயற்கைகோள் படமும், பிரபலமானவர்களைப்பற்றி கேட்டால் அவர்கள் படம், பிறந்த இடம் மற்றும் பல தகவல்கள் இப்படி பல சேவைகளை சத்தமே இல்லாமல் செய்கிறது இத்தளம்.
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்
மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும் பலரும் அதன் பாதுகாப்பு விடயங்களில் கவனமாக இருப்பதில்லை. ஒன்றுக்கு இரண்டாக மின்னஞ்சல் இல்லாதவர்கள் எவரும் உலகில் இல்லை.நமது மின்னஞ்சல்களில் தான் முக்கியமான விவரங்கள் எல்லாம் வைத்திருப்போம். பல தளங்களில் Registration செய்த தகவல்கள், சமுக வலைத்தள விவரங்கள் மேலும் பல முக்கியமான மின்னஞ்சல்களும் வைத்திருப்போம்.
திடீரென்று உங்கள் மின்னஞ்சல் கணக்கை எவராவது சில சமயம் நண்பர்கள் கூட களவாடலாம்(hacking gmail). சரியான கடவுச்சொல் தானே வைத்திருக்கிறோம் என்று நினைத்து விட்டு விட்டால் களவாடப்பட்ட பின் புலம்ப வேண்டியது தான்.
ஜிமெயில் சேவைக்கு சரியான கடவுச்சொல் வைத்தால் மட்டும் போதாது. மேலும் சில விடயங்களைச் செய்தும் சரியாக கவனித்தும் வந்தால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும்.
1. இணையதள முகவரியை சரிபாருங்கள்: இணையத்திருடர்கள் ஜிமெயிலின் முகப்புப்பக்கம் போலவே செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் லொகின் செய்தவுடன் வேறொரு தளத்திற்கு இழுத்துச் சென்று உங்கள் தகவல்கள் திருடப்படலாம். எனவே https://gmail.com என்ற முகவரியில் தான் செல்கிறீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
2. பொது இடங்களில் பயன்படுத்துவதைத் தவிருங்கள்: Keyloggers எனச் சொல்லப்படும் மென்பொருள்கள் நீங்கள் தட்டச்சிடும் போது எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டு அதன் சர்வருக்கு உங்கள் தகவல்களை அனுப்பி விடும். எனவே உங்களுக்குத் தெரியாமல் இணைய செண்டர்களில் நிறுவப்பட்டிருந்தால் போயிற்று. எனவே முடிந்தவரை பொது இடங்களில் பயன்படுத்தாதீர்கள்.
3. இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு Forward செய்தல்: ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் உங்கள் மின்னஞ்சல்களை இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு திருப்பி விட முடியும்(Forwarding mails). எனவே இரண்டாவது ஜிமெயில் ஒன்றை உருவாக்கி அதில் முதன்மை மின்னஞ்சல்கள் எல்லாமே வருகிற மாதிரி அமைக்கலாம். பொது இடங்களில் பயன்படுத்துகிற போது இரண்டாவது ஜிமெயில் கணக்கை உபயோகிக்கலாம். Settings -> Forwading and Pop/Imap.
4. நாள்தோறும் ஜிமெயிலின் Account Activity கவனித்தல்: Account Activity ஜிமெயிலின் சிறப்பான சேவை. இதன் மூலம் எந்தெந்த உலவியில் எந்த நேரத்தில் எந்தெந்த ஐ.பி அட்ரஸ்களில் பயன்படுத்தியுள்ளார்கள் என்று தெரியும். ஒரே இடத்தில் பயன்படுத்தினால் ஒரே IP Address தான் இருக்கும். சந்தேகப்படுமாறு பயன்படுத்தப்பட்டிருந்தால் Sign out All other Sessions என்பதைக் கொடுத்து முறையாக வெளியேறுங்கள்.
5. தேவையில்லாத Filter இருக்கிறதா எனப் பாருங்கள்: Filter மூலம் குறிப்பிட்ட மின்னஞ்சல்களையோ அல்லது அனைத்து மின்னஞ்சல்களையோ Forward செய்தல், அழித்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம்.
நீங்கள் ஜிமெயில் கணக்கிலிருந்து சரியாக வெளியேறாமல் இருந்திருக்கலாம். நண்பர்களே உங்களின் கடவுச்சொல்லை அறிய முயற்சிக்காமல் Filter என்பதைக் கொடுத்து விடலாம். இப்போது உங்களுக்கு வரும் எல்லா மின்னஞ்சல்களும் உங்கள் நண்பருக்கும் போகும். இது புது வகை. அதனால் தேவையில்லாத Filter இருக்கிறதா எனச் சரிபாருங்கள். Settings -> Filters.
6. சந்தேகமான சுட்டிகளைக் கிளிக் செய்யாதீர்கள்: சில நேரம் உங்களுக்கு gmailteam@google.com இலிருந்து மெயில் வந்துள்ளது. உங்கள் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமானால் கீழே கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிப்பு வரலாம்.
உங்கள் கடவுச்சொல்லை கேட்கும் எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள். ஏனெனில் ஜிமெயில் இதுமாதிரி உங்களிடம் கேட்பதில்லை. பலவகையான ஏமாற்று மின்னஞ்சல்கள் இதைப் போல செயல்படுகின்றன.
7. உங்கள் கடவுச்சொல்லை வலிமையாக்குங்கள்: உங்கள் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துகளாவது இருக்கவேண்டும். கட்டாயம் எழுத்துகளில் எண்களையும் பயன்படுத்துங்கள். உங்கள் மொபைல் எண், பெற்றொர் பெயர், உறவினர் பெயர் போன்றவற்றை வைக்காதீர்கள். கடவுச்சொல்லை எங்கேயும் எழுதவோ கணணியில் குறித்தோ வைக்காதீர்கள்.
News:Lankasri
Saturday, May 28, 2011
உங்கள் கணணியின் இணைய வேகத்தை அதிகரிக்க
இணையம் என்னும் கடலில் நீந்துவதற்கு நமக்கு பயன்படுவது இணைய உலவிகளாகும். இந்த இணைய உலவிகளில் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது IE, Chrome, Firefox போன்ற உலவிகளாகும்.இதற்கு அடுத்ததாக அனைவராலும் விரும்பி உபயோகப்படுத்தப்படுவது Opera என்ற என்ற உலவியாகும். இந்த உலவியிலும் வசதிகள் மிக ஏராளம் குறிப்பாக இந்த பிரவுசரில் இணைய வேகம் மிகவும் பிரமாதமாக உள்ளது. வேகம் குறைவான இணைய இணைப்பு வைத்து இருந்தாலும் இந்த உலவி மூலம் வேகமாக இணையத்தை பயன்படுத்தலாம்.
பயன்கள்:
1. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Fastest Java Script engine கொண்டுள்ளது.
2. இணையத்தில் உலவும் போதும் நம் கணணிக்கு மிகவும் பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
3. டேப் வசதிகள் இதில் உள்ளது.
4. அட்ரஸ் பாரில் இருந்தே தேடும் வசதி.
5. குறைந்த இணைய இணைப்பு உள்ள கணணிகலளாலும் வேகமாக உலவ முடியும்.
6. ஹைலைட் செய்தால் நேரடியாக கூகுளில் தேடி கொள்ளும் வசதி.
7. HTML5 சப்போர்ட் செய்யும் உலவி.
8. பார்ப்பதற்கு அழகான தோற்றத்தோடு காணப்படும்.
9. எழுத்துப்பிழைகளை கண்டறியும் வசதி.
இப்படி மேலும் பல அறிய வசதிகள் இந்த உலவியில் உள்ளது.
News:Lankasri
Thursday, May 26, 2011
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு
உண்மையில் நமக்கு ஒன்றுமே தெரியாது. இந்த தளத்தில் நுழைந்தால் வைரஸ் வரவேற்கும் என்று. இதனைத் தடுக்கும் அளவுக்கு நம்மிடம் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருக்க வேண்டும்.
Wednesday, May 25, 2011
கணணியில் USB PORT-யை மறைப்பதற்கு
கணணியில் வைரசால் பாதிப்பு வந்து விடும் என்பதற்காக USB PORTனாது DISABLE செய்யப்பட்டு இருக்கும்.
இதனை WINDOWSஇல் DISABLE செய்வதற்கு:
1. முதலில் REGISTRY EDITOR செல்ல வேண்டும். இங்கு செல்ல RUN----->TYPE "regedit" என டைப் செய்யவும்.
2. அதன் பின் HKEY_LOCAL_MACHINE->SYSTEM->CurrentControlSet->Services->UsbStor. இந்த PATHக்கு சென்று பின் START என்பதை இரண்டு முறை கிளிக் செய்ய வேண்டும்.
3. அடுத்து வரும் விண்டோவில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்ற வேண்டும்.
4. அதன் பின் OK கொடுத்து கணணியை RESTART செய்ய வேண்டும். இதில் கவனிக்க வேண்டியவை 4 என்ற இடத்தில் மாற்றம் செய்வதற்கு முன் இருந்த எண்ணை நினைவில் கொள்ள வேண்டும். அதுதான் ENABLE செய்ய வேண்டிய எண்.
News:Lankasri
Tuesday, May 24, 2011
கண்களுக்கு கட்டுப்படும் கணணி
அத்துடன் கணனியை இயக்க கண்களை பயன்படுத்துவதென்பது மவுஸை பயன்படுதுவதை விட இலகுவனதாக அமைகிறது.
Monday, May 23, 2011
கணணியிலிருந்து கோப்புக்களை ஐபோன் மற்றும் ஐபொட்டிற்கு மாற்றுவதற்கு
கணணியிலிருந்து ஐபோன் மற்றும் ஐபொட்டிற்கு கோப்புகளை பரிமாற்றம் செய்து கொள்ள நிறைய மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன.பெரும்பாலானவர்கள் iTunes என்னும் மென்பொருளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மென்பொருள் மூலமாக மட்டுமே ஐபோன் மற்றும் ஐபொட்டிற்கு ஓடியோ மற்றும் வீடியோக்களை பரிமாற்றம் செய்ய முடியுமா என்றால் இல்லை.
ரத்த அழுத்தத்தை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் புதிய மவுஸ் அறிமுகம்
இந்த MD Mouse ஒரு விசேட வகை Computer Mouse ஆகும். இதில் Blood Pressure Monitor இருப்பதால் நீங்கள் கணணியில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே எந்த வித சச்சரவும் இல்லாமல் உங்கள் இரத்த அழுத்தத்தை அறிந்து கொண்டே இருக்கலாம்.
இந்த MD Mouse இல் உங்கள் இரத்த அழுத்தத்தை அறிய வேண்டும் எனின் உங்கள் விரலை அதில் உள்ள Flip Out Finger Cuffஇல் வைத்தால் போதும்.
அதில் இருக்கும் மென்பொருள் உங்கள் இரத்தக்கொதிப்பை ஆராய்ந்து கூறுவது மட்டுமன்றி அதனைப் பதிவு செய்யும் திறனையும் கொண்டுள்ளது. இந்த விசேட வகை மவுஸை நீங்களும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
News:Lankasri
Sunday, May 22, 2011
கணணியில் டீபால்ட் பிரவுசரை மாற்றுவதற்கு
நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டிருப்பது குரோம், பயர்பொக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்ற இணைய பிரவுசர்களாகும்.அனைத்து பிரவுசர்களிலும் ஒரு வசதி உள்ளது Make Default Browser என்பது. இந்த வசதியில் நமக்கு பிடித்த உலவியை தேர்வு செய்து விட்டால் நாம் இணையத்தில் இருந்து சேமிக்கப்படும் லிங்குகள் அனைத்தும் அந்த டீபால்ட் பிரவுசரில் ஓபன் ஆகும்.
இந்த வசதி நாம் இந்த மென்பொருளை நிறுவச் செய்யும் போதே கேட்கும். அதை கவனிக்காமல் நம்மில் பெரும்பாலானவர்கள் எதையும் படித்து பார்க்காமல் Next கொடுத்துக் கொண்டே வந்து விடுவோம். கடைசியில் நாம் நிறுவிய புதிய பிரவுசர் நம்முடைய கணணியின் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.
பயர்பொக்ஸ் பிரவுசரை டீபால்ட் பிரவுசராக மாற்றுவதற்கு: இதற்கு முதலில் பயர்பொக்ஸ் உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Tools- Options என்பதை க்ளிக் செய்யவும்.
அடுத்து வரும் விண்டோவில் Advanced என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் Check now என்ற பட்டனை க்ளிக் செய்யவும். அடுத்து வரும் பாப் அப் விண்டோவில் Yes என்பதை அழுத்தினால் உங்களுடைய பயர்பொக்ஸ் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.
குரோம் பிரவுசரை தங்களின் டீபால்ட் பிரவுசராக மாற்றுவதற்கு: இதற்கு முதலில் குரோம் உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Settings - Options க்ளிக் செய்து வரும் விண்டோவில் கீழே உள்ள Make Google Chrome my default browser என்பதை கிளிக் செய்தால் போதும். குரோம் உலவி உங்கள் கணினியின் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.
குரோம் IE உலவியை தங்களின் டீபால்ட் பிரவுசராக மாற்றுவதற்கு:இதற்கு முதலில் IE உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Tools- Internet Options- Programs என்பதை க்ளிக் செய்யுங்கள். அடுத்து வரும் விண்டோவில் உள்ள Make Default என்ற பட்டனை க்ளிக் செய்யவும். அந்த பட்டனை அழுத்தினால் IE உலவி உங்களுடைய டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.
News:Lankasri
Saturday, May 21, 2011
கையசைத்தால் பேசலாம்: புதிய ராடார் தொழில்நுட்பம் அறிமுகம்
இனி வரும் காலங்களில் மருத்துவர்கள் எலும்பு முறிவினை குறுந்தூர அலைவாங்கி மூலம் பரிசோதிக்க முடியும்.இக்கருவி குளிரூட்டி மூலம் வெளியிடப்பட்டும் கதிர்வீச்சின் அளவை ஒத்ததாக இருப்பதாகவும் ஆபத்தற்றதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்புதிய தொழிநுட்பம் செலவு குறைந்ததாகவும், உபகரணமானது ஐபோனை ஒத்ததாக இருக்கும் என நுண் இலத்திரனியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆய்வாளர்களின் கருத்துப்படி குறுகிய தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கும் கருவியானது மிகக் குறுகிய தூரத்திலிருக்கும் அலைகளை உள்வாங்குதால் இதனை எதிர்காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. எனவும் எக்ஸ்ரே கருவிக்கு துணைக் கருவியாகப் இதனைப் பயன்படுத்தலாம் எனக் கூறுப்படுகிறது.
எக்ஸ்ரே கருவியுடன் ஒப்பிடும் போது இப்புதிய கண்டுபிடிப்பானது பக்கவிளைவுகளையோ கதிர்கள் கலங்களை ஊடுருவி நோய்களை ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளைக் கொண்டிருக்காவிட்டாலும் எக்ஸ்ரே படப்பிடிப்பின் போது பெறப்படும் துல்லியமான படங்களை வழங்காது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள நிலைமையில் ராடர்கள் நீண்ட தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கி சமிக்கைகளை வெளிப்படுத்துவதில் சிறப்பாகச் செயற்படுகின்றன. இதன் மூலம் எல்லைக் காவலாளிகள் தமது எல்லைகளுக்குள் அந்நிய கப்பல்கள், விமானங்கள் நுழைகின்றனவா எனக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இப்புதிய வரவான குறுந்தூர ராடரானது இது வரை கடினமாக இருந்த குறுகிய தூரத்தில் ஏற்படும் ஒலி அதிர்வுகளை, சமிக்கைகளை கச்சிதமாகப் பிடித்துக் கொள்வதில் உதவலாம் என நம்பப் டுகிறது.
ஒரு ராடர் சமிக்கை ஒளி அலையின் வேகத்துடன் அசைகிறது. அதாவது 300,000 கிலோ மீற்றர் செக்கனுக்கு எனும் வேகத்தில். தற்போதைய தொலை தூர ராடர் மிகச் சரியாக அளக்க கூடிய தூரம் சில சென்ரி மீற்றர்கள், ஆனால் இப்புதிய கண்டு பிடிப்பான குறுந்தூர ராடரானது ஒரு மில்லி மீற்றரைக் கூட துல்லியமாக அளவிடக்கூடியது.
இக் குறுந்தூர ராடர் தனியே மருத்துவ துறையில் மட்டுமல்லாது கட்டிடங்களின் சேதங்கள், கட்டிடங்களை உறுதியாக பேணுவதற்கு உள்ளே வைத்துக் கட்டப்படும் உலோக்கம்பிகள், மின் கடத்தும் வயர்கள் போன்றவற்றைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தலாம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளைக் கண்டறியவும் இக் குறுந்தூர ராடர் உதவ முடியும்.
இது மட்டுமல்லாது இத் தொழிநுட்பத்தை தொலைபேசி நிறுவனங்கள் பயன்படுத்த முற்படும் போது தற்போது தொடுகை மூலம் இயக்கப்படும் கைத்தொலைபேசிகள் எதிர்காலத்தில் கையை காற்றில் வீசுவதன் மூலம் இயங்கச் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றனவாம்.
News:Lankasri
எந்தவொரு மென்பொருளின் துணையுமில்லாமல் ஓடியோ கோப்புக்களை மாற்றம் செய்வதற்கு
ஓடியோ கோப்புக்களை ஒரு போர்மட்டிலிருந்து மற்றொரு போர்மட்டாக மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளின் உதவியை மட்டுமே நாடி செல்ல வேண்டும்.ஓடியோ கோப்புக்களை மாற்றம் செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன. மென்பொருள்களின் உதவி இல்லாமல் ஓடியோ கோப்புக்களை மாற்றம் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது.
நாம் சாதாரணமாக பாடல்களை மாற்றம் செய்ய வேண்டுமெனில் கணணியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக மாற்றம் செய்வோம். சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்க பெறாது. அவ்வாறான வேலையில் நாம் பாடல்களை மாற்றம் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்களுடைய பாடல் கோப்பினை தேர்வு செய்யவும். பின் எந்த போர்மட்டாக மாற்றம் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும்.
அடுத்ததாக மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். கடைசியாக Switch my file என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய பாடலானது மாற்றம் செய்யப்பட்டு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும்.
மேலும் ஒரு வசதி என்னவெனில் பாடலை நம்முடைய விருப்பபடி மாற்றம் செய்து கொள்ளும் வசதியும் இந்த தளத்தில் உள்ளது. WAV, MP3, AAC, AIF, AU, FLAC, M4A, OGG, WMA, மற்றும் M4R போன்ற போர்மட்டுகளில் பாடல்களை மாற்றம் செய்து கொள்ள முடியும்.
பாடல்களை எளிமையான முறையில் மாற்றம் செய்து கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும். கைத்தொலைபேசிகளுக்கு ஏற்றவாறு பாடல்களை மாற்றம் செய்து கொள்ள இந்த தளம் மிகவும் உதவியாக இருக்கும்.
News:Lankasri
புதிய வசதிகளுடன் கூடிய Internet Download Manager மென்பொருளை தரவிறக்கம் செய்ய
Internet Download Manager என்ற மென்பொருளை பற்றி அறியாத நபர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மிகுந்த பிரபலம் வாய்ந்த மென்பொருளாக உள்ளது.உலகில் அதிகமானவர்கள் இந்த மென்பொருளையே பயன்படுத்தி கொண்டிருப்பார்கள். இந்த மென்பொருளை Download செய்தால் .rar file ஆக zip செய்யப்பட்டு வரும். அந்த கோப்பை விரிக்கும் போது ஒரு கடவுச்சொல் கேட்கும்.
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு
கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தில் தகவல்களை எளிதில் களவாட முடியும் என ஜேர்மன் தொழில்நுட்ப பாதுகாப்பு ஆய்வாளர் பாஸ்டியன் கொனிங்ஸ் எச்சரித்துள்ளார்.மேலும் பயன்பாட்டாளர் பொது இணையதள இணைப்பை தொடர்பு கொள்ளும் போது அவரது தொலைபேசி தகவல்கள் அனைத்தும் திருடப்படக் கூடிய அபாயம் உள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.
ஓன்லைனில் PASS PORT மற்றும் VISA புகைப்படங்களை வடிவமைக்க
உங்கள் கணணியில் இருந்தவாறே இணையதளம் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா புகைப்படங்களை வடிவமைத்து கொள்ள முடியும்.இணையதள முகவரிக்கு சென்ற பின் தோன்றும் விண்டோவில் நாட்டினையும், புகைப்படத்தினையும் தெரிவு செய்ய வேண்டும். பின்னர் GET MY PASSPORT என்பதை கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் விண்டோவில் உங்கள் கணணியில் இருந்து புகைப்படத்தை UPLOAD செய்து NEXT என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)












