Pages

Tuesday, May 31, 2011

பயர்பொக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் புதிய நீட்சி FxChrome

Best Blogger Tips
இணைய உலகில் அதிகம் பேரால் விரும்பப்படும் பயன்படுத்தப்படும் உலாவியாக பயர்பொக்ஸ் இருந்து வருகிறது. ஆனால் கூகிள் வெளியிட்ட குரோம் உலவி தற்போது இதற்கு சவாலாக வந்து கொண்டிருக்கிறது.
இதன் வளர்ச்சியும் அபரிதமாக உள்ளது. பயர்பொக்ஸ் ரசிகர்களையும் மெல்ல மெல்ல இழுத்து பயர்பாக்சின் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.

பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்

Best Blogger Tips
வீட்டு விழாக்கள், வெளி இடங்கள் செல்லும் போது படங்கள் எடுத்து கொள்வது தற்போது நம் வழக்கமாகிவிட்டது.
செல்போன் எப்படி மனித தேவைகளில் ஒன்றாக ஆகிவிட்டதோ அதே போல்தான் கொமராவும். எங்கு சென்றாலும் கொமரா எடுத்து சென்று புகைப்படம் எடுப்பது தற்போது வழக்கமாகிவிட்டது.

பேஸ்புக்கில் பழைய பொட்டோ வியூவரை மீண்டும் செயற்படுத்துவதற்கான புதிய முறை

Best Blogger Tips
நண்பர் ஒருவரின் பேஸ்புக் கணக்கில் அவரது படங்களை பார்க்கும் பக்கத்தில் முதலில் கறுப்பு நிறத்தில் பேக்கரவுண்ட் நிறத்தை மாற்றியது பேஸ்புக், பின்னர் வெள்ளை நிறம் என தொடரந்து மாற்றங்களை செய்து வருகின்றது. 

எனினும் இந்த மாற்றங்கள் எதையும் விரும்பாதவர்கள் பழைய லைட் பாக்ஸ் எபெக்ட் இல்லாத போட்டோ வியூவரை விரும்புவர்கள் இலகுவாக அதை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.
அதற்கு பேஸ்புக்கில் படத்தை திறந்து விட்டு குறிப்பிட்ட பக்கத்தை ஒரு முறை Refresh செய்துவிட்டால் சரியாகிவிடும்.
அல்லது படத்தை திறந்ததும் ஒரு முறை கீபோட்டில் f5 கீயை அழுத்தினால் பழைய நிலைக்கு திரும்பிவிடும்.
News:Lankasri

Monday, May 30, 2011

பாடல்களை கட் செய்வதற்கு

Best Blogger Tips
கைத்தொலைபேசியில் அனைவருக்கும் புதுப்புது பாடல்களை அழைப்பு ஒலியாக வைக்க விரும்புவோம். இதற்காக பாடல்களை இணையத்தில் தேடிப்பிடித்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோம்.
எல்லா பாடல்களும் கிடைத்து விடாது. ஒரு சில பாடல்கள் முழுபாடல்களாக மட்டுமே கிடைக்கும். அதுபோன்ற பாடல்களை தனியே கட் செய்து நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் ஏதாவது ஒரு மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும்.
பாடல்களை கட் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் கிடைக்கின்றன. அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் MP3 Cutter.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணணியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த MP3 Cutter மென்பொருளை ஒப்பன் செய்யவும்.
பின் எந்த பாடலை கட் செய்ய வேண்டுமோ அதை File வழியாக சென்று ஒப்பன் செய்யவும். பின் உங்களுடைய பாடலானது பதிவேற்றம் செய்யப்பட்டு மென்பொருளில் ஒப்பன் ஆகும். பின் வேண்டிய பகுதியை தேர்வு செய்து கட் செய்து கொள்ளவும்.
பின் நீங்கள் கட் செய்த பாடலை சேமித்து கொள்ளவும். அவ்வளவு தான் இனி நீங்கள் விரும்பிய பாடலில் எந்த பகுதியை வேண்டுமானலும் அழைப்பு ஒலியாக மட்டுமல்ல நீங்கள் விரும்பும் பாடலாகவும் வைத்துக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் பாடல்களை கட் செய்ய அருமையான மென்பொருள் ஆகும்.
News:Manithan

Sunday, May 29, 2011

அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் இணையம்

Best Blogger Tips
ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிதான காரியம் இல்லை என்றாலும் கூகுள் போன்ற தளங்கள் பதில் அளித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
ஆனால் ஒரு தளம் கேள்விகளுக்கு பதிலை நேரடியாக தன்னுடைய தளத்திலே அளிக்கிறது. கணக்கு அளவீடு முதல் உள்ளூர் தகவல் வரை கணணி மூலம் செயற்கைகோள் வரை அனைத்து கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் இருந்து பதில் அளிக்கிறது.
கணக்கு செய்ய வேண்டும் என்றால் ஒரு தளம், மேப் பார்ப்பதற்கு மற்றொரு தளம், அறிவியல் தகவல் அறிந்து கொள்ள மற்றும் ஒரு தளம், மருத்துவ தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் மற்றும் ஒரு தளம்.
இப்படி ஒவ்வொரு தளமாக சென்று தான் இதுவரை நாம் தகவல்களை அறிந்து கொண்டிருந்தோம். இனி ஒரே தளத்தில் இருந்து அத்தனைக்கும் பதில் கொடுப்பதற்காக ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளத்திற்கு சென்று கட்டத்திற்குள் ஒரு கணக்கு கொடுத்தால் உடனடியாக அதற்கான விடையும், ஒரு நாட்டைப்பற்றி கேட்டால் அந்த நாட்டின் மக்கள் தொகை என்ன எந்த மொழி பேசுபவர்கள் அதிகமாக வசிக்கின்றனர் என்பதையும், செயற்கைகோள் பற்றி கேட்டால் அதற்கான புள்ளி விபரங்களுடனும் தகவல்களை கொடுக்கின்றது.
ஒரு மருந்தைப் பற்றி கேட்டால் அதற்கான முழுவிபரமும், குறிப்பிட்டை ஊரைப்பற்றி கேட்டால் அந்த ஊரின் செயற்கைகோள் படமும், பிரபலமானவர்களைப்பற்றி கேட்டால் அவர்கள் படம், பிறந்த இடம் மற்றும் பல தகவல்கள் இப்படி பல சேவைகளை சத்தமே இல்லாமல் செய்கிறது இத்தளம்.

ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்

Best Blogger Tips
மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும் பலரும் அதன் பாதுகாப்பு விடயங்களில் கவனமாக இருப்பதில்லை. ஒன்றுக்கு இரண்டாக மின்னஞ்சல் இல்லாதவர்கள் எவரும் உலகில் இல்லை.
நமது மின்னஞ்சல்களில் தான் முக்கியமான விவரங்கள் எல்லாம் வைத்திருப்போம். பல தளங்களில் Registration செய்த தகவல்கள், சமுக வலைத்தள விவரங்கள் மேலும் பல முக்கியமான மின்னஞ்சல்களும் வைத்திருப்போம்.
திடீரென்று உங்கள் மின்னஞ்சல் கணக்கை எவராவது சில சமயம் நண்பர்கள் கூட களவாடலாம்(hacking gmail). சரியான கடவுச்சொல் தானே வைத்திருக்கிறோம் என்று நினைத்து விட்டு விட்டால் களவாடப்பட்ட பின் புலம்ப வேண்டியது தான்.
ஜிமெயில் சேவைக்கு சரியான கடவுச்சொல் வைத்தால் மட்டும் போதாது. மேலும் சில விடயங்களைச் செய்தும் சரியாக கவனித்தும் வந்தால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும்.
1. இணையதள முகவரியை சரிபாருங்கள்: இணையத்திருடர்கள் ஜிமெயிலின் முகப்புப்பக்கம் போலவே செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் லொகின் செய்தவுடன் வேறொரு தளத்திற்கு இழுத்துச் சென்று உங்கள் தகவல்கள் திருடப்படலாம். எனவே https://gmail.com என்ற முகவரியில் தான் செல்கிறீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
2. பொது இடங்களில் பயன்படுத்துவதைத் தவிருங்கள்: Keyloggers எனச் சொல்லப்படும் மென்பொருள்கள் நீங்கள் தட்டச்சிடும் போது எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டு அதன் சர்வருக்கு உங்கள் தகவல்களை அனுப்பி விடும். எனவே உங்களுக்குத் தெரியாமல் இணைய செண்டர்களில் நிறுவப்பட்டிருந்தால் போயிற்று. எனவே முடிந்தவரை பொது இடங்களில் பயன்படுத்தாதீர்கள்.
3. இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு Forward செய்தல்: ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் உங்கள் மின்னஞ்சல்களை இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு திருப்பி விட முடியும்(Forwarding mails). எனவே இரண்டாவது ஜிமெயில் ஒன்றை உருவாக்கி அதில் முதன்மை மின்னஞ்சல்கள் எல்லாமே வருகிற மாதிரி அமைக்கலாம். பொது இடங்களில் பயன்படுத்துகிற போது இரண்டாவது ஜிமெயில் கணக்கை உபயோகிக்கலாம். Settings -> Forwading and Pop/Imap.
4. நாள்தோறும் ஜிமெயிலின் Account Activity கவனித்தல்: Account Activity ஜிமெயிலின் சிறப்பான சேவை. இதன் மூலம் எந்தெந்த உலவியில் எந்த நேரத்தில் எந்தெந்த ஐ.பி அட்ரஸ்களில் பயன்படுத்தியுள்ளார்கள் என்று தெரியும். ஒரே இடத்தில் பயன்படுத்தினால் ஒரே IP Address தான் இருக்கும். சந்தேகப்படுமாறு பயன்படுத்தப்பட்டிருந்தால் Sign out All other Sessions என்பதைக் கொடுத்து முறையாக வெளியேறுங்கள்.
5. தேவையில்லாத Filter இருக்கிறதா எனப் பாருங்கள்: Filter மூலம் குறிப்பிட்ட மின்னஞ்சல்களையோ அல்லது அனைத்து மின்னஞ்சல்களையோ Forward செய்தல், அழித்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம்.
நீங்கள் ஜிமெயில் கணக்கிலிருந்து சரியாக வெளியேறாமல் இருந்திருக்கலாம். நண்பர்களே உங்களின் கடவுச்சொல்லை அறிய முயற்சிக்காமல் Filter என்பதைக் கொடுத்து விடலாம். இப்போது உங்களுக்கு வரும் எல்லா மின்னஞ்சல்களும் உங்கள் நண்பருக்கும் போகும். இது புது வகை. அதனால் தேவையில்லாத Filter இருக்கிறதா எனச் சரிபாருங்கள். Settings -> Filters.
6. சந்தேகமான சுட்டிகளைக் கிளிக் செய்யாதீர்கள்: சில நேரம் உங்களுக்கு gmailteam@google.com இலிருந்து மெயில் வந்துள்ளது. உங்கள் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமானால் கீழே கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிப்பு வரலாம்.
உங்கள் கடவுச்சொல்லை கேட்கும் எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள். ஏனெனில் ஜிமெயில் இதுமாதிரி உங்களிடம் கேட்பதில்லை. பலவகையான ஏமாற்று மின்னஞ்சல்கள் இதைப் போல செயல்படுகின்றன.
7. உங்கள் கடவுச்சொல்லை வலிமையாக்குங்கள்: உங்கள் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துகளாவது இருக்கவேண்டும். கட்டாயம் எழுத்துகளில் எண்களையும் பயன்படுத்துங்கள். உங்கள் மொபைல் எண், பெற்றொர் பெயர், உறவினர் பெயர் போன்றவற்றை வைக்காதீர்கள். கடவுச்சொல்லை எங்கேயும் எழுதவோ கணணியில் குறித்தோ வைக்காதீர்கள்.
News:Lankasri

Saturday, May 28, 2011

உங்கள் கணணியின் இணைய வேகத்தை அதிகரிக்க

Best Blogger Tips
இணையம் என்னும் கடலில் நீந்துவதற்கு நமக்கு பயன்படுவது இணைய உலவிகளாகும். இந்த இணைய உலவிகளில் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது IE, Chrome, Firefox போன்ற உலவிகளாகும்.
இதற்கு அடுத்ததாக அனைவராலும் விரும்பி உபயோகப்படுத்தப்படுவது Opera என்ற என்ற உலவியாகும். இந்த உலவியிலும் வசதிகள் மிக ஏராளம் குறிப்பாக இந்த பிரவுசரில் இணைய வேகம் மிகவும் பிரமாதமாக உள்ளது. வேகம் குறைவான இணைய இணைப்பு வைத்து இருந்தாலும் இந்த உலவி மூலம் வேகமாக இணையத்தை பயன்படுத்தலாம்.
பயன்கள்:
1. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Fastest Java Script engine கொண்டுள்ளது.
2. இணையத்தில் உலவும் போதும் நம் கணணிக்கு மிகவும் பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
3. டேப் வசதிகள் இதில் உள்ளது.
4. அட்ரஸ் பாரில் இருந்தே தேடும் வசதி.
5. குறைந்த இணைய இணைப்பு உள்ள கணணிகலளாலும் வேகமாக உலவ முடியும்.
6. ஹைலைட் செய்தால் நேரடியாக கூகுளில் தேடி கொள்ளும் வசதி.
7. HTML5 சப்போர்ட் செய்யும் உலவி.
8. பார்ப்பதற்கு அழகான தோற்றத்தோடு காணப்படும்.
9. எழுத்துப்பிழைகளை கண்டறியும் வசதி.
இப்படி மேலும் பல அறிய வசதிகள் இந்த உலவியில் உள்ளது.
News:Lankasri

Thursday, May 26, 2011

பென்டிரைவ் மற்றும் போர்ட்டபிள் டிவைஸ்களை போர்மட் செய்வதற்கு

Best Blogger Tips
பென்ட்ரைவ் மற்றும் போர்ட்டபிள் ட்ரைவர்களில் வைரஸ்கள் புகுந்துவிடும். இவற்றை அழிக்க முயற்சித்தாலும் முடியாது.
இறுதியாக ட்ரைவரினை போர்மட் செய்து விடலாம் என்ற முடிவிற்கு வருவோம். பின் அவற்றை நம்முடைய கணணியுடன் பொருத்தி விண்டோஸ் போர்மட் செய்வோம்.

Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு

Best Blogger Tips
இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எந்த தளத்திலிருந்து வைரஸ் வரும் என்று பயந்து கொண்டே இருப்பார்கள்.
உண்மையில் நமக்கு ஒன்றுமே தெரியாது. இந்த தளத்தில் நுழைந்தால் வைரஸ் வரவேற்கும் என்று. இதனைத் தடுக்கும் அளவுக்கு நம்மிடம் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருக்க வேண்டும்.

Wednesday, May 25, 2011

கணணியில் USB PORT-யை மறைப்பதற்கு

Best Blogger Tips
USB PORT அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தாலும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USBனை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும்.
கணணியில் வைரசால் பாதிப்பு வந்து விடும் என்பதற்காக USB PORTனாது DISABLE செய்யப்பட்டு இருக்கும்.
இதனை WINDOWSஇல் DISABLE செய்வதற்கு:
1. முதலில் REGISTRY EDITOR செல்ல வேண்டும். இங்கு செல்ல RUN----->TYPE "regedit" என டைப் செய்யவும்.
2. அதன் பின் HKEY_LOCAL_MACHINE->SYSTEM->CurrentControlSet->Services->UsbStor. இந்த PATHக்கு சென்று பின் START என்பதை இரண்டு முறை கிளிக் செய்ய வேண்டும்.
3. அடுத்து வரும் விண்டோவில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்ற வேண்டும்.
4. அதன் பின் OK கொடுத்து கணணியை RESTART செய்ய வேண்டும். இதில் கவனிக்க வேண்டியவை 4 என்ற இடத்தில் மாற்றம் செய்வதற்கு முன் இருந்த எண்ணை நினைவில் கொள்ள வேண்டும். அதுதான் ENABLE செய்ய வேண்டிய எண்.
News:Lankasri

Tuesday, May 24, 2011

கண்களுக்கு கட்டுப்படும் கணணி

Best Blogger Tips
கண்களை பயன்படுத்தி கணனியை இயக்குவதென்பது கண்களுக்கு ஒரு அதிசயம் என்பதோடு உங்கள் கண்களுக்கு ஏற்படக்கூடிய குறைபடுகளையும் இது குறைக்கிறது.
அத்துடன் கணனியை இயக்க கண்களை பயன்படுத்துவதென்பது மவுஸை பயன்படுதுவதை விட இலகுவனதாக அமைகிறது.

Monday, May 23, 2011

கணணியிலிருந்து கோப்புக்களை ஐபோன் மற்றும் ஐபொட்டிற்கு மாற்றுவதற்கு

Best Blogger Tips
கணணியிலிருந்து ஐபோன் மற்றும் ஐபொட்டிற்கு கோப்புகளை பரிமாற்றம் செய்து கொள்ள நிறைய மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
பெரும்பாலானவர்கள் iTunes என்னும் மென்பொருளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மென்பொருள் மூலமாக மட்டுமே ஐபோன் மற்றும் ஐபொட்டிற்கு ஓடியோ மற்றும் வீடியோக்களை பரிமாற்றம் செய்ய முடியுமா என்றால் இல்லை.

ரத்த அழுத்தத்தை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் புதிய மவுஸ் அறிமுகம்

Best Blogger Tips
நீங்கள் உங்கள் கணணியில் Browsing அல்லது ஏதாவது வேலை செய்து கொண்டே உங்கள் இரத்த அழுத்தத்தை அறிந்து கொள்ளலாம்.
இந்த MD Mouse ஒரு விசேட வகை Computer Mouse ஆகும். இதில் Blood Pressure Monitor இருப்பதால் நீங்கள் கணணியில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே எந்த வித சச்சரவும் இல்லாமல் உங்கள் இரத்த அழுத்தத்தை அறிந்து கொண்டே இருக்கலாம்.
இந்த MD Mouse இல் உங்கள் இரத்த அழுத்தத்தை அறிய வேண்டும் எனின் உங்கள் விரலை அதில் உள்ள Flip Out Finger Cuffஇல் வைத்தால் போதும்.
அதில் இருக்கும் மென்பொருள் உங்கள் இரத்தக்கொதிப்பை ஆராய்ந்து கூறுவது மட்டுமன்றி அதனைப் பதிவு செய்யும் திறனையும் கொண்டுள்ளது. இந்த விசேட வகை மவுஸை நீங்களும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
News:Lankasri

Sunday, May 22, 2011

கணணியில் டீபால்ட் பிரவுசரை மாற்றுவதற்கு

Best Blogger Tips
நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டிருப்பது குரோம், பயர்பொக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்ற இணைய பிரவுசர்களாகும்.
அனைத்து பிரவுசர்களிலும் ஒரு வசதி உள்ளது Make Default Browser என்பது. இந்த வசதியில் நமக்கு பிடித்த உலவியை தேர்வு செய்து விட்டால் நாம் இணையத்தில் இருந்து சேமிக்கப்படும் லிங்குகள் அனைத்தும் அந்த டீபால்ட் பிரவுசரில் ஓபன் ஆகும்.
இந்த வசதி நாம் இந்த மென்பொருளை நிறுவச் செய்யும் போதே கேட்கும். அதை கவனிக்காமல் நம்மில் பெரும்பாலானவர்கள் எதையும் படித்து பார்க்காமல் Next கொடுத்துக் கொண்டே வந்து விடுவோம். கடைசியில் நாம் நிறுவிய புதிய பிரவுசர் நம்முடைய கணணியின் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.
பயர்பொக்ஸ் பிரவுசரை டீபால்ட் பிரவுசராக மாற்றுவதற்கு: இதற்கு முதலில் பயர்பொக்ஸ் உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Tools- Options என்பதை க்ளிக் செய்யவும்.
அடுத்து வரும் விண்டோவில் Advanced என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் Check now என்ற பட்டனை க்ளிக் செய்யவும். அடுத்து வரும் பாப் அப் விண்டோவில் Yes என்பதை அழுத்தினால் உங்களுடைய பயர்பொக்ஸ் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.
குரோம் பிரவுசரை தங்களின் டீபால்ட் பிரவுசராக மாற்றுவதற்கு: இதற்கு முதலில் குரோம் உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Settings - Options க்ளிக் செய்து வரும் விண்டோவில் கீழே உள்ள Make Google Chrome my default browser என்பதை கிளிக் செய்தால் போதும். குரோம் உலவி உங்கள் கணினியின் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.
குரோம் IE உலவியை தங்களின் டீபால்ட் பிரவுசராக மாற்றுவதற்கு:இதற்கு முதலில் IE உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Tools- Internet Options- Programs என்பதை க்ளிக் செய்யுங்கள். அடுத்து வரும் விண்டோவில் உள்ள Make Default என்ற பட்டனை க்ளிக் செய்யவும். அந்த பட்டனை அழுத்தினால் IE உலவி உங்களுடைய டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.
News:Lankasri

Saturday, May 21, 2011

கையசைத்தால் பேசலாம்: புதிய ராடார் தொழில்நுட்பம் அறிமுகம்

Best Blogger Tips
இனி வரும் காலங்களில் மருத்துவர்கள் எலும்பு முறிவினை குறுந்தூர அலைவாங்கி மூலம் பரிசோதிக்க முடியும்.
இக்கருவி குளிரூட்டி மூலம் வெளியிடப்பட்டும் கதிர்வீச்சின் அளவை ஒத்ததாக இருப்பதாகவும் ஆபத்தற்றதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்புதிய தொழிநுட்பம் செலவு குறைந்ததாகவும், உபகரணமானது ஐபோனை ஒத்ததாக இருக்கும் என நுண் இலத்திரனியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆய்வாளர்களின் கருத்துப்படி குறுகிய தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கும் கருவியானது மிகக் குறுகிய தூரத்திலிருக்கும் அலைகளை உள்வாங்குதால் இதனை எதிர்காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. எனவும் எக்ஸ்ரே கருவிக்கு துணைக் கருவியாகப் இதனைப் பயன்படுத்தலாம் எனக் கூறுப்படுகிறது.

எக்ஸ்ரே கருவியுடன் ஒப்பிடும் போது இப்புதிய கண்டுபிடிப்பானது பக்கவிளைவுகளையோ கதிர்கள் கலங்களை ஊடுருவி நோய்களை ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளைக் கொண்டிருக்காவிட்டாலும் எக்ஸ்ரே படப்பிடிப்பின் போது பெறப்படும் துல்லியமான படங்களை வழங்காது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள நிலைமையில் ராடர்கள் நீண்ட தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கி சமிக்கைகளை வெளிப்படுத்துவதில் சிறப்பாகச் செயற்படுகின்றன. இதன் மூலம் எல்லைக் காவலாளிகள் தமது எல்லைகளுக்குள் அந்நிய கப்பல்கள், விமானங்கள் நுழைகின்றனவா எனக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இப்புதிய வரவான குறுந்தூர ராடரானது இது வரை கடினமாக இருந்த குறுகிய தூரத்தில் ஏற்படும் ஒலி அதிர்வுகளை, சமிக்கைகளை கச்சிதமாகப் பிடித்துக் கொள்வதில் உதவலாம் என நம்பப் டுகிறது.
ஒரு ராடர் சமிக்கை ஒளி அலையின் வேகத்துடன் அசைகிறது. அதாவது 300,000 கிலோ மீற்றர் செக்கனுக்கு எனும் வேகத்தில். தற்போதைய தொலை தூர ராடர் மிகச் சரியாக அளக்க கூடிய தூரம் சில சென்ரி மீற்றர்கள், ஆனால் இப்புதிய கண்டு பிடிப்பான குறுந்தூர ராடரானது ஒரு மில்லி மீற்றரைக் கூட துல்லியமாக அளவிடக்கூடியது.
இக் குறுந்தூர ராடர் தனியே மருத்துவ துறையில் மட்டுமல்லாது கட்டிடங்களின் சேதங்கள், கட்டிடங்களை உறுதியாக பேணுவதற்கு உள்ளே வைத்துக் கட்டப்படும் உலோக்கம்பிகள், மின் கடத்தும் வயர்கள் போன்றவற்றைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தலாம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளைக் கண்டறியவும் இக் குறுந்தூர ராடர் உதவ முடியும்.
இது மட்டுமல்லாது இத் தொழிநுட்பத்தை தொலைபேசி நிறுவனங்கள் பயன்படுத்த முற்படும் போது தற்போது தொடுகை மூலம் இயக்கப்படும் கைத்தொலைபேசிகள் எதிர்காலத்தில் கையை காற்றில் வீசுவதன் மூலம் இயங்கச் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றனவாம்.

News:Lankasri

எந்தவொரு மென்பொருளின் துணையுமில்லாமல் ஓடியோ கோப்புக்களை மாற்றம் செய்வதற்கு

Best Blogger Tips
ஓடியோ கோப்புக்களை ஒரு போர்மட்டிலிருந்து மற்றொரு போர்மட்டாக மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளின் உதவியை மட்டுமே நாடி செல்ல வேண்டும்.
ஓடியோ கோப்புக்களை மாற்றம் செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன. மென்பொருள்களின் உதவி இல்லாமல் ஓடியோ கோப்புக்களை மாற்றம் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது.
நாம் சாதாரணமாக பாடல்களை மாற்றம் செய்ய வேண்டுமெனில் கணணியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக மாற்றம் செய்வோம். சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்க பெறாது. அவ்வாறான வேலையில் நாம் பாடல்களை மாற்றம் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்களுடைய பாடல் கோப்பினை தேர்வு செய்யவும். பின் எந்த போர்மட்டாக மாற்றம் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும்.
அடுத்ததாக மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். கடைசியாக Switch my file என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய பாடலானது மாற்றம் செய்யப்பட்டு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும்.
மேலும் ஒரு வசதி என்னவெனில் பாடலை நம்முடைய விருப்பபடி மாற்றம் செய்து கொள்ளும் வசதியும் இந்த தளத்தில் உள்ளது. WAV, MP3, AAC, AIF, AU, FLAC, M4A, OGG, WMA, மற்றும் M4R போன்ற போர்மட்டுகளில் பாடல்களை மாற்றம் செய்து கொள்ள முடியும்.
பாடல்களை எளிமையான முறையில் மாற்றம் செய்து கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும். கைத்தொலைபேசிகளுக்கு ஏற்றவாறு பாடல்களை மாற்றம் செய்து கொள்ள இந்த தளம் மிகவும் உதவியாக இருக்கும்.
News:Lankasri

புதிய வசதிகளுடன் கூடிய Internet Download Manager மென்பொருளை தரவிறக்கம் செய்ய

Best Blogger Tips
Internet Download Manager என்ற மென்பொருளை பற்றி அறியாத நபர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மிகுந்த பிரபலம் வாய்ந்த மென்பொருளாக உள்ளது.
உலகில் அதிகமானவர்கள் இந்த மென்பொருளையே பயன்படுத்தி கொண்டிருப்பார்கள். இந்த மென்பொருளை Download செய்தால் .rar file ஆக zip செய்யப்பட்டு வரும். அந்த கோப்பை விரிக்கும் போது ஒரு கடவுச்சொல் கேட்கும்.

கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு

Best Blogger Tips
கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தில் தகவல்களை எளிதில் களவாட முடியும் என ஜேர்மன் தொழில்நுட்ப பாதுகாப்பு ஆய்வாளர் பாஸ்டியன் கொனிங்ஸ் எச்சரித்துள்ளார்.
மேலும் பயன்பாட்டாளர் பொது இணையதள இணைப்பை தொடர்பு கொள்ளும் போது அவரது தொலைபேசி தகவல்கள் அனைத்தும் திருடப்படக் கூடிய அபாயம் உள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.

ஓன்லைனில் PASS PORT மற்றும் VISA புகைப்படங்களை வடிவமைக்க

Best Blogger Tips
உங்கள் கணணியில் இருந்தவாறே இணையதளம் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா புகைப்படங்களை வடிவமைத்து கொள்ள முடியும்.
இணையதள முகவரிக்கு சென்ற பின் தோன்றும் விண்டோவில் நாட்டினையும், புகைப்படத்தினையும் தெரிவு செய்ய வேண்டும். பின்னர் GET MY PASSPORT என்பதை கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் விண்டோவில் உங்கள் கணணியில் இருந்து புகைப்படத்தை UPLOAD செய்து NEXT என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

சூரிய கலம் மூலம் இயங்கும் முதல் சர்வதேச விமானம் (வீடியோ இணைப்பு)

Best Blogger Tips
சூரிய சக்தி முலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம் தனது பயணத்தை மே 13ம் திகதி அன்று ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
விமானம் தனது பயணத்தை சுவிஸ்லாந்தின் PAYERNE விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் LUXEMBOURG ஆகிய நாடுகளுக்கு மேலாக 12400 அடி உயரத்தில் 12 மணி 59 நிமிடங்கள் பறந்து பெல்ஜியத்தின் BRUSSELS விமான நிலையத்தில் தரையிறங்கியது.

கணணியில் டிரைவர்களை நகல் எடுப்பதற்கு

Best Blogger Tips
கணணி பயன்படுத்தும் நம்மில் பலர் கணணியில் உள்ள தகவல்களை அல்லது முக்கியமான மென்பொருள்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறையாவது காப்பு நகல் எடுப்பதே இல்லை.
இதனால் நீங்கள் திடீரென்று எதாவது பிரச்சினை என்று கணணியை முழுதும் Format செய்யும் போது உங்களுடைய மென்பொருள்கள் அல்லது தகவல்கள் திரும்பக்கிடைக்குமா என்று பார்த்தால் சந்தேகமே வரும்.

Saturday, May 14, 2011

உங்கள் கணணியை பாதுகாக்க

Best Blogger Tips
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் நம்முடைய கணணிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது.
இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகப்படுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்தப்படுகிறது.
இப்பொழுது இந்த ஆன்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதன் பதிப்பான 6.0.1000 இருந்து பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 6.0.1125 என்ற புதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
1. அவஸ்ட் மென்பொருளை அனைவரும் உபயோக படுத்த காரணமே வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது.
2. கணணியில் ஏதாவது புதிய வைரஸ் நுழைய முயன்றாலே தகவல் தெரிவித்து அதை அழித்து விடுகிறது.
3. இணையத்தில் சில மால்வேர் பாதிக்கப்பட்ட தளங்களுக்கு சென்றால் நமக்கு தகவல் தருகிறது.
4. வன்தட்டுக்களில் குறிப்பிட்ட அளவே இடத்தை எடுத்து கொள்வதால் கணணியின் வேகம் குறைவதில்லை.
5. வேகமாக கோப்புகளை ஸ்கேன் செய்ய கூடியது.
6. கோப்புகளை உபயோகித்து கொண்டிருந்தாலும் ஸ்கேன் செய்யும்.
7. ஸ்கிறீன் சேவர்களையும் ஸ்கேன் செய்யும் வசதி.
8. கணணி பூட் ஆகும் போதே ஸ்கேன் செய்யும் வசதி NT/2000/XP உபோகிப்பவர்களுக்கு மட்டும்.
இந்த மென்பொருளை நிறுவும் முறை:
நீங்கள் இந்த ஆன்ட்டிவைரசை ஏற்கனவே உபயோகித்து கொண்டு இருந்தால் நீங்கள் சுலமாக இந்த அப்டேட் வெர்சனை நிறுவி கொள்ளலாம்.
முதலில் கீழே டாஸ்க்பாரில் உள்ள அவஸ்ட் லோகோ மீது வலது க்ளிக் செய்து வரும் விண்டோவில் Update என்பதை க்ளிக் செய்து பிறகு Program என்பதை க்ளிக் செய்தால் போதும் உங்கள் கணணியில் புதிய பதிப்பு இன்ஸ்டால் ஆகிவிடும்.
ஏற்கனவே இந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை உபயோகிக்காதவர்கள் கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

Opera 11.0வை பதிவிறக்கம் செய்வதற்கு

Best Blogger Tips
புதிய பதிப்பு வெளியான சில நாட்களிலேயே முழுமையான பதிப்பை வெளியிடுவது ஆப்பராவின் வாடிக்கையாகும். இந்த முறையும் 11.10 பதிப்பினை அதே போல் வெளியிட்டுள்ளது.
ஆப்பராவின் இணைய தளத்திலிருந்து இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்த கோப்பினைக் கணணியில் பதிப்பது மிக எளிதான ஒரு வேலையாக உள்ளது.
கையில் எடுத்துச் சென்று மற்ற கணணிகளில் பணியாற்ற போர்ட்டபிள் பதிப்பு ஒன்றும் கிடைக்கிறது. கணணி பதிந்தவுடன் என்ன சிறப்பு வசதிகள் புதுமையாகக் கிடைக்கின்றன என்று பட்டியலிடப்படுகிறது.
ஸ்பீட் டயல் திருத்தி அமைக்கப்பட்டு வேகமாக இயங்குகிறது. இதனை Speed Dial 2.0 என ஆப்பரா அழைக்கிறது. இதற்கு முன் இருந்த ஸ்பீட் டயல் வசதியில் இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பீட் டயல் பக்கத்தில், எத்தனை இணைய தளங்களை வேண்டுமானாலும் இணைக்கலாம்.
பிரவுசருக்கான ப்ளக் இன் தொகுப்புகள் இல்லை எனில் அவற்றை எளிதாக இதில் பதிக்கலாம். இப்போதைக்கு அடோப் பிளாஷ் பிளேயர் சப்போர்ட் செய்யப்படுகிறது. மேலும் பல புரோகிராம்கள் இணைக்கப்படலாம். பிளாஷ் பிளேயர், கணணி இல்லை என்றால் அதனைப் பதிக்கக் கூறும் செய்தியும், தளத்திற்கான லிங்க்கும் தரப்படுகிறது.
ஆப்பராவின் கம்ப்ரஸ்ஸன் தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டு கிடைக்கிறது. பயனாளருக்கு தகவல்களை அனுப்பும் முன், ஆப்பரா சர்வரில் அவை கம்ப்ரஸ் செய்யப்படுகின்றன. இதன் மூலம் தரவிறக்கம் செய்வது தொடர்ந்தும் வேகமாகவும் நடைபெறுகிறது.
ஆப்பரா பிரவுசரின் இந்த புதிய பதிப்பினைத் தரவிறக்கம் செய்திட விரும்புவோர் http://www.opera.com/ browser/  என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
ஆப்பரா இப்போது வெப் இமெயில் சேவையினைத் தருகிறது. இது அனைவருக்கும் இலவசமே. இது My Opera Mail என அழைக்கப்படுகிறது. பயன்படுத்திப் பாருங்கள்.

Friday, May 13, 2011

விக்கிலீக்ஸ் வெளியிடும் அனைத்து தகவல்களையும் உடனே அறிந்து கொள்ள

Best Blogger Tips
உலக அளவில் தொடர்ந்து மர்ம முடிச்சுகளை வெளிஉலகத்திற்கு கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விக்கிலீக்ஸ் பற்றிய உடனடி தகவல்களை நாம் தெரிந்து கொள்ள ஒரு தளம் உள்ளது.
உலகில் இணையதளம் பயன்படுத்தும் அனைவரையுமே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பெருமை விக்கிலீக்ஸ் தளத்திற்கு உண்டு. யாருக்கும் பயப்படாமல் உண்மைய உலகுக்கு ஆதாரத்துடன் நிரூபித்த விக்கிலீக்ஸ் செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அனைவரும் நொடியில் அறிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
Wikiriver (விக்கி நதி)என்பது தான் இத்தளத்தின் பெயர். இத்தளத்திற்கு சென்று நாம் தற்போது வெளிவந்துள்ள விக்கிலீக்ஸ் செய்திகள் என்னென்ன எத்தனை தளங்களில் இதற்கு தொடர்பான செய்தி வந்துள்ளது.
இப்படி வெளிவந்திருக்கும் செய்தியின் பற்றிய வல்லுனர்களின் கருத்துக்கள் எந்தெந்த தளங்களில் எல்லாம் வந்திருக்கிறது என்பதை நமக்கு நொடியில் அளிப்பதற்காக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நீரோடையாக ஒரே பக்கத்தில் முன்னனி விக்கிலீக்ஸ் செய்திகளை கொடுக்கிறது. அங்கு கொடுத்திருக்கும் இணைப்பை சொடுக்கி ஒவ்வொரு செய்திகள் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

யூடியூப் வீடியோக்களை தேவையான போர்மட்டில் தரவிறக்க செய்வதற்கு

Best Blogger Tips
யூடியூப் இணையதளத்தில் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு ஏகப்பட்ட படங்கள் உள்ளன.
படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவருகிறதோ இல்லையோ இதில் முன்கூட்டியே வெளியிடப்படும். இதில் படங்களைப் பார்ப்பவர்கள் பிடித்திருந்தால் தரவிறக்க வேண்டும் என நினைப்பார்கள்.
சிலர் மென்பொருள்களின் மூலமும், சில இணையதளங்களின் மூலமாகவும் படங்களைத் தரவிறக்கம் செய்வார்கள். இதில் படங்கள் FLV என்ற வடிவத்தில் இருக்கும். இதனால் படங்களைத் தரவிறக்கி மறுபடியும் நமக்குப் பிடித்த வடிவத்திற்கு மாற்றுவோம்.
வேறு எந்த மென்பொருளின் துணையின்றியும் வேறு இணையதளத்திற்குச் செல்லாமலும் பயர்பொக்ஸ் உலவியில் ஒரு நீட்சியைச் சேர்ப்பதன் மூலம் எளிதாக யூடியூப் படங்களைத் தரவிறக்க முடியும். இந்த நீட்சியின் பெயர் Easy Youtube Video Downloader.
இதில் உள்ள சிறப்பு வசதி என்னவென்றால் பார்த்துக் கொண்டிருக்கிற படம் பிடித்திருந்தால் நேரடியாக படத்திற்கு கீழேயே தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பில் வேண்டிய வகையைத் தேர்வு செய்து தரவிறக்கலாம்.
Mp3, Mp4, FLV மற்றும் யூடியூபின் புதிய வசதியான High Definition வகையிலும் தரவிறக்க முடியும். சில படங்கள் HD யில் இல்லாமல் இருக்கும். அவற்றிற்கு கிழே HD என்ற வசதி மட்டும் இருக்காது.
பின்னர் பயர்பொக்ஸ் உலவியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து விட்டு யூடியூப் தளத்திற்குச் சென்று எதாவது ஒரு படத்தைக் கிளிக் செய்து பாருங்கள். வீடியோவிற்குக் கிழே Download as என்ற மெனு புதியதாக இருக்கும். அதில் வேண்டிய வடிவத்தைத் தேர்வு செய்தால் படம் உங்கள் கணணிக்கு எளிதாக தரவிறக்கப்படும்.

பேஸ்புக், டுவிட்டர் குறித்து மீண்டும் ஒரு எச்சரிக்கை

Best Blogger Tips
பேஸ்புக், ஓர்குட் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை இலக்குவைத்து நடத்தப்படும் ஏமாற்று வேலைகள் பெரிய அளவில் அதிகரித்து இருப்பதாக இணைய பாதுகாப்பு தொடர்பில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. 

ஃபிஷிங் என்று சொல்லப்படும் ஏமாற்று வேலைகள் அதிகரித்துவருவதை கணினி மென்பொருள் உற்பத்திப் பெருநிறுவனமான மைக்ரோசாஃப்ட் நடத்தியுள்ள ஆய்வு காட்டுகிறது. ஃபிஷிங் என்பது பெரும்பாலும் நண்பர்களிடம் இருந்து வருகின்ற அழைப்பு போலவோ அல்லது தகவல் போலவோ அமைந்திருக்கும். ஆனால் இவை உண்மையில் இணையத்தில் குற்றச்செயல்களை செய்ய முயலும் ஆட்களிடம் இருந்து வருபவை. வலைத்தளத்தைப் பயன்படுத்துவோரை ஏமாற்றி அவர்களிடம் இருந்து முக்கியமான பிரத்யேகத் தகவல்களைப் பெறுவது இந்த அழைப்பு மற்றும் தகவல்களின் நோக்கமாகும். 

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லாம் இப்போது மிகவும் பிரபலம் அடைந்து ஏராளமனவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தமது கைவரிசையைக் காட்ட இந்த இணையத்தளங்களை அதிகம் இலக்கு வைக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. 

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை நடத்துகின்ற இணையப் பாதுகாப்பு பற்றிய ஆய்வு கடைசியாக வெளியிட்டுள்ள அறிக்கை இந்தப் பிரச்சினையையின் தீவிரத்தன்மையை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது. அறுபது கோடி கணினிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில் கடந்த ஒருஆண்டில் மட்டும் சமூக வலைத்தளங்கள் வழியாக நடத்தப்படுகின்ற ஃபிஷிங் மோசடி வேலை முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 12 மடங்கு அதிகரித்துள்ளது. 

ஃபிஷிங் எமாற்று வேலை என்பது, பொதுவாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது நாம் அறிந்த ஒருவர், அதாவது நமது நண்பர் அல்லது உடன் பணியாற்றுபவர் ஒருவரிடம் இருந்து வருகின்ற செய்திபோல வரும். நண்பர் கேட்பதுபோல நம்முடைய பிரத்யேகத் தகவல்களை, தனிநபர் தகவல்களைக் கேட்கும். அப்படி நாம் தகவல்களைக் கொடுத்தால் அது கிரிமினல்கள் கைகளில் கிடைத்துவிடும். அதனைப் பயன்படுத்தி அவர்கள் வங்கிக் கணக்கு, இணைய வர்த்தக கணக்கு போன்றவற்றில் மோசடி வேலைகளைச் செய்து பணம் திருடுவார்கள். 

சில ஆண்டுகளுக்கு முன் இப்படியான ஃபிஷிங் மோசடி மின் அஞ்சல்களில் பெரிய அளவில் நடந்துவந்தது. ஆனால் இப்போது இத்தகைய மோசடிகள் பெருமளவு சமூக வலைத்தளங்களை இலக்குவைத்து நடத்தப்படுகிறது. 

ஒரு ஆண்டுக்கு முன்புவரை சமூக வலைத்தளங்களில் நடந்த பல விதமான ஏமாற்று வேலைகளில் பத்து சதவீதத்துக்கும் குறைவாகவேதான் இந்த ஃபிஷிங் மோசடி வேலைகள் நடந்ததாக ஆய்வுகள் காட்டியிருந்தன. ஆனால் மொத்த மோசடிகளில் 85 சதவீதத்தை தொடும் அளவுக்கு சென்ற ஆண்டு கடைசியில் இவ்வகையான மோசடிகள் அபரிமிதமாக அதிகரித்து விட்டுள்ளன என்று இந்த புதிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

Tuesday, May 10, 2011

கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க புதிய முறை

Best Blogger Tips
நீங்கள் இன்டர்நெட்டில் ப்ரௌசிங் செய்து கொண்டிருக்கும்போது திடீரென “Page not found” என error message வருவதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம்.
நீங்கள் உங்கள் மொடம் உட்பட எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தி என்ன நேர்ந்தது என கேட்க ஆரம்பிப்பீர்கள்.
இவ்வாறான நிகழ்வுகள் உங்கள் கணணியின் Internet Protocol (IP) முகவரியினை புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்படுவதால் நிகழுகின்றது. கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகள் எவ்வாறு IP முகவரியினை புதுப்பிப்பது என்பதை விளக்குகிறது.
வழிமுறைகள்
strat button இல் க்ளிக் செய்து Run என்பதை தெரிவு செய்யுங்கள்.
Type “cmd” in the box and click on “OK.” விண்டோவில் உடனடியாக கட்டளை ஒன்று தென்படும். இது பழைய DOS operating system இனை ஒத்திருக்கும்.
Type “ipconfig /release” and press “Enter இது உங்கள் கணணியின் தற்போதைய IP முகவரியினை வெளியிடும்.
Type “ipconfig /renew” and press “Enter.” இது புதிய IP முகவரியினை ஒப்படைக்கும்.
Type “Exit” and press “Enter” பின்னர் உங்கள் விண்டோ close செய்யப்படும். தற்போது உங்கள் கணணி புதிய IP முகவரியினைப் பெற்றிருக்கும்.

ஸ்கைப்பை வாங்குகிறது மைக்ரோ சாஃப்ட்

Best Blogger Tips

இணையதளத்தின் மூலம் தொலைபேசி மற்றும் வீடியோ உரையாடல்களை மேற்கொள்ள வழி செய்யும் சேவையான ஸ்கைப்பை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எட்டரை பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்புக் கொண்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 36 ஆண்டு கால வரலாற்றில் மிகப் பெரிய வர்த்தக் கொள்முதல் இதுவேயாகும்.
ஸ்கைப்பின் மூலம் மாதமொன்றுக்கு நூற்றி எழுபது மில்லியன் மக்கள், இணையதளத்தின் வழியாக ஒலி மற்றும் ஒளி வடிவிலான உரையாடல்களை மேற்கொள்கின்றனர்.
இதன் மூலம் இந்தப் பெருந்தொகையானவர்கள் மைக்ரோ சாஃப்ட் மென் பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் கூடுவார்கள்.
ஸ்கைப்பை தனது எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு கன்சோல், அவுட்லுக் மின்னஞ்சல் செயற்பாடுகள் மற்றும் அதிநவீன தொலைபேசிகளின் பயன்பாடு ஆகியவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளும் என மைக்ரோ சாஃப்ட் கூறியுள்ளது.
ஸ்கைப்புக்கு உள்ள இளைமைத் தன்மை, அதை பலதரப்பட்ட சமூக மக்கள் பயன்படுத்துவது போன்ற நன்மைகள் இதன் மூலம் கிடைக்கும் என மைக்ரோ சாஃப்ட் நம்பக் கூடும் என பிபிசியின் தொழில்நுட்பச் செய்தியாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Friday, May 6, 2011

ஒசாமா பின்லேடன் கொல்லப்படும் நேரடி வீடியோ காட்சி என்ற பெயரில் வைரஸ்.... எச்சரிக்கை

Best Blogger Tips
Osama bin Laden Killed (LIVE VIDEO)  என்ற பெயரில் புதிதாக ஒரு வைரஸ்
இணையதளத்தில் வேகமாக உலாவருகிறது இதைப்பற்றிய ஒரு
எச்சரிக்கை ரிப்போர்ட்.

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் இன்று
அதிகமாக உலாவரும் சேதி என்னவென்றால் ஒசாமா பின்லேடன்
கொல்லப்பட்ட நேரடிக்காட்சிகளைக் கொண்ட வீடியோவைப்பார்க்க
இங்கே சொடுக்குங்குள். இதில் பலதரப்பட்ட மக்கள் எப்படி என்று
தெரிந்து கொள்ளும் ஆவலில் சொடுக்கியவுடன் அவர்கள் கணினியை
வைரஸ் பதம் பார்த்துவிடுகிறது இதற்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கை என்னவென்று பார்க்கலாம்.

உங்களுக்கு இமெயில் அல்லது பேஸ்புக் அல்லது டிவிட்டர் போன்ற
சோசியல் தளங்களில் இருந்து படம்  ஒருவீடியோ காட்டப்படும் அதில்
ஒசாமா பின்லேடன் கொல்லப்படும்நேரடி வீடியோ காட்சியை யூடியுப்
ஒளிபரப்ப அனுமதி கொடுக்காதகாரணத்தால் இங்கு கொடுக்கப்படிருக்கும்
முகவரியை சொடுக்கிஅந்த வீடியோவை பாருங்கள் என்று இருக்கும் உடன் 
கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியை எக்காரணம் கொண்டும்
சொடுக்க வேண்டாம். நாம் எதையும் தரவிரக்காமல் எப்படி நம்கணினியை 
வைரஸ் தாக்கும் என்றெல்லாம் அறிவுப்பூர்வமாகயோசிப்பதற்குள் உங்கள் 
கணினி வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும்.அதாவது நாம் உலாவியில் பார்க்கும்
இணையதளங்கள் கணினியில் தற்காலிகமாக (Temporary) ஆக சேமிக்கப்பட்டு 
தான் நமக்கு காட்டப்படும் இந்த வைரஸ் தன் பணியை உலாவி Temporary ஆக 
சேமிக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கூகிஸ் மூலம் நண்பர்களின்
இமெயில் முகவரியை எடுத்து அவர்களுக்கும் அனுப்பிவிடுகிறது.
முன்னனி ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் கூட விழிபிதுங்கி இருக்கிறது.
இதுபோல் ஒசாமா பெயரில் வரும் எந்த இணைப்பையும் (Link)
சொடுக்காமல் இருப்பது தான் பிரச்சினை வராமல் தடுக்க ஒரே வழி.
உங்கள் நண்பர்களுக்கும் இந்தப்பதிவை கொண்டு செல்லுங்கள்.

Text Widget

Text Widget