Pages

Tuesday, May 31, 2011

பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்

Best Blogger Tips
வீட்டு விழாக்கள், வெளி இடங்கள் செல்லும் போது படங்கள் எடுத்து கொள்வது தற்போது நம் வழக்கமாகிவிட்டது.
செல்போன் எப்படி மனித தேவைகளில் ஒன்றாக ஆகிவிட்டதோ அதே போல்தான் கொமராவும். எங்கு சென்றாலும் கொமரா எடுத்து சென்று புகைப்படம் எடுப்பது தற்போது வழக்கமாகிவிட்டது.

அப்படியே கொமரா இல்லாவிட்டாலும் செல்போனிலாவது புகைப்படங்களை எடுப்போம். அவ்வாறு எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தும் சரியானவையாக இருக்காது. ஒவ்வொன்று ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அனைத்து கணணி பயனாளர்களும் பொட்டோசாப் புலி என்று கூற முடியாது.
புகைப்படங்கள் முறையற்றதாக இருந்தால் அவற்றை பொடோசாப் உதவியுடன் சரிசெய்துவிடலாம் என்று என்னுவோம், பொட்டோசாப் மென்பொருளை முறையாக கற்காதவர்கள் என்ன செய்வது, பொட்டோசாப் கற்கும் வரை, அடுத்த மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும். பொட்டோக்களை அழகுபடுத்த இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் உள்ளன. அவை பயன்படுத்தவும் மிகவும் எளிமையானதாக உள்ளது. அந்த வகையில் நமக்கு பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள் தான் BorderMaker.
மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை கணணியில் நிறுவ ஜாவா உங்கள் கணணியில் இருக்க வேண்டும். இந்த மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ் (.dep), மேக் இயங்குதளங்கு கிடைக்கிறது. போர்ட்டபிள் மென்பொருளாகவும் இந்த BorderMaker கிடைக்கிறது. இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் சரி செய்ய வேண்டிய பொட்டோவினை தேர்வு செய்யவும். பின் Setting என்னும் தேர்வை தேர்வு செய்து வேண்டிய மாற்றங்களை செய்ய முடியும். பார்டர், வாட்டர்மார்க் மற்றும் பல எடிட்டிங் வேலைகளை செய்ய இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். போட்டோக்களை மறுஅளவு செய்யவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளுடைய மிகமுக்கியமான அம்சமே பார்டர் அமைப்பது ஆகும்.
News:Lankasri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget