Pages

Tuesday, June 14, 2011

தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக பெற

Best Blogger Tips
இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள்.
ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய மின்னஞ்சல் கொடுத்து தரவிறக்கம் செய்தால் அந்த மின்னஞ்சலை பல spam நிறுவனங்களுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத மின்னஞ்சலில் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும். ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது. ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர்.
இப்படிபட்டவர்களுக்கான ஒரு இலவச தளம் உள்ளது. மென்பொருட்களை உங்கள் மின்னஞ்சலுக்கே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் பிரபலமான தளம். இந்த தளத்தில் தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக அறிமுகப்படுத்துவார்கள்.
அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய 24 மணி நேரம் கால அவகாசம் கொடுப்பார்கள். அதற்குள் அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
24 மணி நேரம் கழித்து தரவிறக்கம் செய்தால் அந்த மென்பொருளை இலவசமாக பெற முடியாது. காசுகொடுத்து தான் வாங்க வேண்டும் ஆக முந்தி கொள்வதே நல்லது.
இந்த தளத்தில் நாம் உறுப்பினர் நம் மின்னஞ்சலை கொடுத்து பதிந்து விட்டால் அந்த நாளுக்கான இலவச மென்பொருளை பற்றி நமது மின்னஞ்சலுக்கே அனுப்பி விடுவார்கள். அந்த லிங்கில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தரவிறக்கம் செய்து நிறுவச் செய்ததும் கொடுக்கப்படும் ஆக்டிவேசன் கீயை மறக்காமல் கொப்பி செய்து மென்பொருளை register செய்து கொண்டால் தான் காலம் முழுவதும் இலவசமாக மென்பொருளை உபயோகிக்க முடியும்.
ஆனால் இந்த முறையில் உள்ள ஒரு குறை நாம் மென்பொருளை நிறுவச் செய்யும் அந்த பதிப்பில் இருந்து புதிய பதிப்பை அப்டேட் செய்ய முடியாது. அப்டேட் செய்ய வேண்டுமென்றால் காசு கொடுத்து ஆகவேண்டும்.
இந்த தளத்தில் சைட்பாரில் உள்ள விட்ஜெட்டில் subscribe by Email என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் மின்னஞ்சலை கொடுத்து பதிந்து கொண்டால் உங்கள் மின்னஞ்சலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்றி செய்தி அனுப்புவார்கள்.

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget